ரயிலில் இருந்து குதித்து குற்றவாளி தப்பியோட்டம்.. தகவல் தெரிந்தால் தெரிவிக்க கோவை போலீஸ் வேண்டுகோள்
கோவை: மோசடி வழக்கு தொடர்பாக கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த நபரை மேற்கு வங்க போலீஸார் நேற்று கைது செய்து ரயில் மூலமாக அழைத்து வந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபர் திடீரென ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்ற நபர் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்க வேண்டும் என்று கோவை போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவர் மீது மேற்கு வங்கத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கு வங்க போலீசார் ஆனந்தனைத் தேடி வந்தனர். தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆனந்தன் பாலாக்காட்டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பாலக்காடு வந்த மேற்கு வங்க போலீசார் ஆனந்தனை கைது செய்து, கடந்த 26 ஆம் தேதி ரயில் மூலம் மேற்கு வங்கம் அழைத்துச் சென்றனர். கடந்த 27 ஆம் தேதி அதிகாலையில் ரயில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது, ஆனந்தன் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத போலீஸார் தொடர்ந்து அவரை தேடிய நிலையில், போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போத்தனூர் ரயில் காவல் நிலையத்தில் மேற்கு வங்க போலீசார் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தப்பிச் சென்ற ஆனந்தன் குறித்த தகவல் தெரிந்தால், அல்லது எங்கேனும் பார்த்தால் (94981-80937, 94981-27357 ) எண்ணில் தகவல் அளிக்க போத்தனூர் ரயில்வே போலீசார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications