"வீடியோ எடுக்காதீங்க".. பதறிய லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. லைட்டை ஆட்டி.. பனியன் கிழிந்து.. என்னா ஆத்திரம்
கோவை லேடீஸ் ஹாஸ்டலில் பரபரப்பு ஏற்பட்டது
கோவை: "கொரோனா டெஸ்ட் செய்துக்குங்க" என்று அறிவுறுத்த சென்ற மாநகராட்சி ஊழியர்களை, லேடீஸ் ஹாஸ்டல் ஓனர், டைல்ஸ் கல்லால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது...
ஏராளமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது... நிறைய பரிசோதனை முகாம்களையும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக, காந்திபுரம் கி்ராஸ் கட் வீதி பகுதியில், கொரொனா பரிசோதனை முகாம் போடப்பட்டுள்ளது...!

மாநகராட்சி
ஏனென்றால், ஒரு சிலருக்கு இந்த பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளது.. இந்த தகவல் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.. அதனால்தான், இந்த பகுதியில் இப்படி ஒரு முகாம் போடப்பட்டுள்ளது.. இதனால், அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் நிறுவனங்களில் உள்ள பொது மக்களை கொரொனா டெஸ்ட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அத்துடன், வீடு வீடாக சென்று டெஸ் செய்து கொள்ளுமாறு மாநகராட்சி ஊழியர்கள் அறிவுறுத்தியும் வருகின்றனர்.

லேடீஸ் ஹாஸ்டல்
அப்படித்தான் கிராஸ் கட் 3வது தெருவுக்குள் ஊழியர்கள் நுழைந்தனர்.. அங்கே சாந்தி மகளிர் ஹாஸ்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த ஹாஸ்டலுக்குள் சென்றும், டெஸ்ட் செய்து கொள்ளுமாறு சொன்னார்கள்.. ஆனால், அந்த ஹாஸ்டலின் ஓனர் வின்சென்ட் என்பவர் மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறு செய்தார்.. டெஸ்ட் செய்ய முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மாநகராட்சி சூப்பரவைசரின் செல்போனை பிடுங்கி கீழே வீசினார்..

டைல்ஸ் கற்கள்
அங்கிருந்த டைல்ஸ் கற்களை தூக்கி அடித்தார்.. மாநகராட்சி ஊழியர்களையும் தாக்க முயற்சி மேற்கொண்டார்.. பெண் ஊழியர்களை கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசினார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இது குறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள்... இந்த காட்சிகள் அத்தனையையும் அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்தனர்.. இதை பார்த்ததும் லேடீஸ் ஹாஸ்டலை சேர்ந்த ஒரு பெண், "வீடியோவெல்லாம் ஏன் எடுக்கறீங்க? வீடியோ எடுக்காதீங்க" என்று பதறி கொண்டே வந்தார்.

நடவடிக்கை
எனினும், இந்த காட்சிகள் அத்தனையும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனிடையே ஹாஸ்டலில் மாநகராட்சி ஊழியர்களை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக உயரதிகாரிகளுக்கு மாநகராட்சி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.. உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்படி சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications