கோயம்புத்தூரில் வீடு வாங்க போறீங்களா? இந்த திருவிழா உங்களுக்காகத்தான்.. நோட் பண்ணுங்க!
கோயம்புத்தூர்: சொந்த வீடு என்பது எல்லோருக்குமே ஒரு கனவுதான். அந்த கனவை, 'கிரெடாய் அமைப்பு' தொடர்ந்து நிஜமாக்கி வருக்கிறது. அந்த வகையில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கோவையில் வீடு வாங்குபவர்களுக்கான திருவிழாவை கோவை கிரெடாய் அமைப்பு நடத்துகிறது.
"ஃபேர் புரோ 2025" ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ என்கிற பெயரில் ஆகஸ்ட் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்கள் கோவை கொடிசியா ஹால் E-யில் இந்த கண்காட்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இதுகுறித்து கிரெடாய் கோவை அமைப்பின் தலைவர் எஸ். ஆர். அரவிந்த் குமார் கூறுகையில், "கோவையில் சொந்த வீடுகள் வாங்க விருப்பப்படும் மக்களுக்கு இந்தப் ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தக் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட முன்னணி டெவலப்பர்கள் பங்கேற்கின்றனர். இதில், 100-க்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இந்தக் கண்காட்சியில் டெவலப்பர்களைத் தவிர, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சவுத் இந்தியன் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, எச்.டி.எப்.சி வங்கி, எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி வங்கிகள் பங்கேற்கின்றனர். இந்த வங்கிகள் மக்களுக்கு தேவையான வீட்டுவசதி கடனை வழங்க உள்ளன. இந்தக் கண்காட்சியின் பிரதான பார்ட்னர் வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது" என்று கூறியுள்ளார்.
கண்காட்சி குறித்து ஃபேர் புரோ 2025 கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் பேசியதாவது, "அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள். சீனியர் லிவிங் யூனிட்கள், பிளாட்கள் மற்றும் கேட்டட் கம்யூனிட்டிகள் உள்ளிட்ட சொத்துகளின் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ரூ. 20 லட்சம் முதல் ரூ. 7 கோடி வரையிலான விலைகளில் சொத்துகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளன. டெவலப்பர்கள் இந்த எக்ஸ்போவிற்காகவே தனிச்சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர்" என்றார்.
இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, ஜெ.எல்.எல். நிறுவனம், கோவை ரியல் எஸ்டேட் சந்தை தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடவுள்ளது. அதனை தொடர்ந்து, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நகர வளர்ச்சி குறித்து நிபுணர்களின் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரெடாய் கோவை செயலாளர் சஞ்சனா விஜய்குமார், கூறியதாவது "கடந்த ஆண்டு கோவையில் புதிய வீட்டு திட்டங்கள் 52 சதம் அதிகரித்துள்ளன. புதிய அலுவலக கட்டிட திட்டங்கள் மில்லியன் சதுர அடிக்கு தொடங்கியுள்ளன. மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், மேற்கு பைபாஸ் சாலை ஆகியவற்றால் கோவையின் வளர்ச்சி மிக வேகமாக நடக்கிறது. இதனால் கோவையை தவிர நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் முதலீட்டாளர்கள் கோவையில் வீடு அல்லது நிலம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.
பொருளாளர் கார்த்திக் குமார் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, உதவி பொது மொளர், வீட்டுக்கடன் பிரிவு. கோயம்பத்தூர் வடக்கு திரு. பிரவீன் ப்ரொபெர்ட்டி எக்ஸ்போவில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்களை விளக்கினார்கள்.
இக்கண்காட்சிக்கு ஐக்குவார், காவேரி பாலிமர்ஸ், புஷ்பிட் ஸ்டீல்ஸ், ரெனாட்டஸ் புரோகான் ஆகியவை கோல்ட் பார்ட்னராக உள்ளனர். சூர்யதேவ் அலாய்ஸ் அண்டு பவர், வாட்டர்டெக் இந்தியா, ஈகிள் இண்டஸ்ட்ரீஸ், அப்ரூவல் குரு மற்றும் அதானி சிமென்ட் ஆகியவை கார்ப்பரேட் பார்ட்னராக பங்கேற்கின்றன.
இந்த ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்களுக்காக திறந்திருக்கும். வீடு விலைக்கு வாங்க விருப்படும் மக்கள் அனைவரையும் கிரெடாய் கோவை அழைக்கிறது.
கிரெடாய் ஒரு பார்வை
(CREDAI - Confederation of Real Estate Developers' Associations of India) என்பது இந்தியாவின் தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் உச்ச அமைப்பாகும். 20 மாநிலங்களில் 230 நகரங்களில் 13,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. கிரெடாய் கோவை - 75-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிரெடாய் கோவை, நகரின் முக்கிய ரியல் எஸ்டேட் வளர்ச்சியாளர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து செயல்பட்டு வருகிறது. ஃபேர் புரோ 2025 ப்ரொபெர்ட்டி எக்ஸ்போ உங்கள் கனவு வீட்டை உருவாக்கும் முதற்கட்டமாகும்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
தரையிறங்க தாழ்வாக பறந்த விமானத்தால்.. 100 வீடுகளின் மேற்கூரைக்கு நேர்ந்த கதி.. அலறியடித்த மக்கள் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications