எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்.. 3 மாதங்களே கெடு! கடிதத்தில் வந்த வார்னிங்கால் கோவையில் பரபரப்பு
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறி கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 30 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தி எஸ்பி வேலுமணியை கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்துள்ளது.

இந்த கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், கோவையில் வெடிகுண்டு வைத்து ஜூலை 30 ஆம் தேதிக்குள் எஸ்.பி.வேலுமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளோம். கருப்பு பணம் வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. மே 25 ஆம் தேதி குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு சென்றால் 3 மாதங்களில் குடும்பத்தில் உள்ள மூன்று பேரை கொல்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பாக கோவை புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட கோவை மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications