நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த அஞ்சலி.. டாக்டர் இல்லை.. ஓடி வந்து கை கொடுத்த லட்சுமி பாட்டி!
கோவையில் நடுரோட்டில் பெண்ணுக்கு பாட்டி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
கோவை: ஆஸ்பத்திரியில் ஆபத்துக்கு ஒரு டாக்டரும் இல்லாததால், நடுரோட்டிலேயே பெண்ணுக்கு பாட்டி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். இவ்வளவு மோசமான சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.
மன்னார்குடியைச்சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி அஞ்சலி. இவர் நேற்றைக்கு வீரகேரளம் பகுதியிலுள்ள தன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அஞ்சலிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதனால், வேடப்பட்டி என்ற கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைக்கு அஞ்சலியை அழைத்து வந்துள்ளனர். ஆனால் அங்கு ஒரு டாக்டரும் இல்லாததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனால் அங்கிருந்த நர்ஸ்கள், அரசு ஆஸ்பத்திரிக்கு அஞ்சலியை கொண்டு போய் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்கள்.

லட்சுமி பாட்டி
அதனால் வேறு வழி இல்லாததால், அஞ்சலியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கலாம் என அங்கிருந்து வெளியே கூட்டி வந்தனர். அப்போது, பிரசவ வலி இன்னும் அதிகமாகிவிட்டது. வலியால் துடிப்பதை ஆஸ்பத்திரிக்கு வெளியே பெட்டிக்கடை வைத்திருக்கும் லட்சுமி என்ற பாட்டி கவனித்து, அஞ்சலிக்கு உதவ முன்வந்தார்.

பொதுமக்கள் ஆத்திரம்
ஆனால், வேடப்பட்டி - தொண்டாமுத்தூர் ரோட்டிலேயே அஞ்சலிக்கு பாட்டி பிரசவம் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. கொஞ்ச நேரத்திலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் உறவினர்களும், பொதுமக்களும் சந்தோஷப்பட்டாலும், இப்படி சாலையில் பிரசவம் பார்க்கும்படி ஆகிவிட்டதே என்று ஆத்திரப்பட்டார்கள்.

வாக்குவாதம்
அதனால், டாக்டர்கள் இல்லாத அந்த ஆஸ்பத்திரிக்குள் சென்று அங்கிருந்த நர்ஸ்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தாயும், சேயும் 108 அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

டாக்டர்கள் இல்லை
ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆபத்துக்குகூட ஒரு டாக்டர்கள் இல்லாமல் இருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications