மோடிக்கு இந்த விஷயம் தெரியுமா? ஓங்கியடிக்குமா திமுக? குழப்பியடித்த பிரேமலதா.. மலைத்த அதிமுக கோவை
கோவை: கோயம்புத்தூருக்கு கொடுத்த வாக்குறுதியை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்று கூறி, தன்னுடைய பிரச்சாரத்தை இன்று முதல் துவங்கியிருக்கிறார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். இந்த பிரச்சாரத்தில் ஒரு ஹைலைட் சமாச்சாரம் நடந்தது. என்ன தெரியுமா?
கோவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகிறார்கள்..

கவனம்: அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார் என்றதுமே, தேசிய அளவில் கவனத்தை குவித்துள்ளது இந்த தொகுதி.. மேலும், 3 கட்சிகளுமே பலம்வாய்ந்த கட்சிகள் என்பதால், கோவை தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. எனவேதான், மூத்த தலைவர்களும், தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க கட்டாயம் இன்று கோயம்புத்தூரில் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தை, அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, கோவையிலிருந்தே துவங்கியிருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா.
பாஜக: வழக்கமாக, தேமுதிகவின் பிரச்சாரம் என்றாலே திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது இயல்பான விஷயம்.. ஆனால், இந்த முறை பாஜகவையும் சேர்த்தே விமர்சித்திருக்கிறார் பிரேமலதா.
இதற்கு முன்பு பாஜகவை, தேமுதிக கடுகளவுகூட விமர்சித்தது கிடையாது.. இத்தனைக்கும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான அனைத்து முழுமுதற் முயற்சிகளை எடுத்தும்கூட, நூலிழையில் தேமுதிகவை நழுவவிட்டது பாஜக. இப்படிப்பட்ட சூழலில், திமுகவை போலவே, பாஜகவையும் இழுத்து கொண்டுவந்து தேமுதிக விமர்சித்துள்ளது தமிழக மக்களின் கவனத்தை குவிய வைத்து வருகிறது.
அதுமட்டுமல்ல, பிரேமலதா இன்றைய தினம் பிரச்சாரத்தில், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக குற்றஞ்சாட்டி பேசிக்கொண்டேயிருந்தார்.. "பெரும்பாலான சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதை நாம் இங்கே கண்கூடாக பார்க்கிறோம்" என்றார்.
குழப்பம்: பிறகு திடீரென சுதாரித்துக்கொண்டு, "கடந்த ஆட்சியில் அனைத்து சாலைகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்" என்றார் பிரேமலதா..
அதாவது, சாலைகள் போட்டது திமுக அரசு என்று நினைத்து முதலில் குறைசொல்லிவிட்டு, பிறகு, அதிமுகவினரை சமாதானப்படுத்துவதற்காக, அனைத்து சாலைகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக சமாளித்து பேசினார் பிரேமலதா.. கூட்டத்துக்கு வந்திருந்தவர்களிடையே சிரிப்பலையையும், சலசலப்பையும் ஏற்படுத்திவிட்டது.
பிரச்சாரம்: பிரேமலதா கோவை பிரச்சாரத்தில் தொடர்ந்து பேசும்போது, "3 தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு பிரச்சாரத்தை தொடங்குகிறேன். அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றியை வழங்க வேண்டும். பிரதமர் மோடி ஆட்சியில்தான் கோவையில் மில்கள் மூடப்பட்டன.. மோடி ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகுதான் மில்கள் மூடப்பட்டன-. 300 சதவீத மின்கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திமுகவும் அவர்களது பினாமிகளும் அனைத்து மில்களையும் விலைக்கு வாங்கி கட்டிடங்களாக மாற்றி வருகின்றனர். கோவையில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. சிறந்த தொழில் நகரமாக கோவை உருவாக அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்" என்றார் பிரேமலதா.
ஹைலைட்: பிரச்சாரத்தின் இறுதியில், "அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை வெற்றி பெற செய்வீர்களா? இரட்டை இலைக்கு வாய்ப்பு தருவீர்களா? அவருடைய குரலை டெல்லியில் ஒலிக்க செய்வீர்களா?" என்று ஜெயலலிதா ஸ்டைலில் பிரேமலதா வாக்கு கேட்டதுமே, அப்படியே மலைத்து போய் உட்கார்ந்துவிட்டது கோவை கூட்டம்..!!!
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி












Click it and Unblock the Notifications