அதிமுகவை நம்பிடாதீங்க! காலம் காலத்துக்கும் அந்தக் கட்சி பாஜகவின் அடிமை தான்! கரு.பழனியப்பன் பேச்சு!
கோவை: அதிமுகவை பொறுத்தவரை காலம் காலத்துக்கும் பாஜகவின் கொத்தடிமையாக தான் இருக்கும் என இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியிருக்கிறார்.
இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக இப்போது பாஜகவிடம் இருந்து பிரிந்திருப்பது போல் அக்கட்சியினர் நடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
திமுக வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் சிறப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இதனைக் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் கோவையில் திமுகவுக்காக கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சிறப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். திமுகவுக்காக பிரச்சாரம் செய்யவுள்ள முக்கியப் பிரமுகர்கள் குறித்த பட்டியலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊர்களின் விவரங்களுக்கு 10 நாட்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

கரு.பழனியப்பன்
அதில் இயக்குநர் கரு.பழனியப்பன் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் அழைப்பை ஏற்று அவருக்கு கோவையில் திமுகவுக்கு ஓட்டுக்கேட்க வந்த கரு.பழனியப்பன், செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுக மற்றும் பாஜகவை வெளுத்து வாங்கினார். மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதில் பாஜகவை மிஞ்ச வேறு யாருமில்லை என்றும் சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவர் எடப்பாடி பழனிசாமி எனவும் சாடினார்.

மக்கள் நம்ப வேண்டாம்
அதிமுகவை மட்டும் மக்கள் நம்பிவிட வேண்டாம் என்றும் பாஜகவின் கொத்தடிமையாக உள்ள அந்தக் கட்சி தேர்தலுக்காக இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை பெற வேண்டி பிரிந்திருப்பது போல் நாடகமாடுவதாக சாடினார். தேர்தலுக்கு பிறகு மீண்டும் அவர்கள் ஒன்றிணைந்து கொள்வார்கள் எனவும் பேசினார். இந்து, முஸ்லீம் என அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக சகோதர, சகோதரிகளாக வாழக்கூடிய இங்கு வெறுப்பு அரசியலை பாஜக முன்னிறுத்தி வருவதாக தெரிவித்தார்.
Recommended Video

வேறு இடம் இல்லை
திமுகவுக்காக கோவையில் மட்டும் இயக்குநர் கரு.பழனியப்பன் பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சில திமுக ஆதரவு முக்கியப் பிரமுகர்கள் பலரை கோவைக்கு அழைத்துச்சென்று பரப்புரையில் ஈடுபடுத்தி வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓயவுள்ளதால் ஓய்வின்றி வேட்பாளர்கள் கடந்த மூன்று நாட்களாக சுழன்று வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications