மின்னல் வேகத்தில் உயரும் கறிக்கோழி விலை.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு
கோவை: கறிக்கோழி வளர்ப்பு பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப்பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய தோராயமாக ₹90 முதல் ₹100 வரை செலவாகிறது. இந்தச் செலவு கோழிப்பண்ணையாளரின் பராமரிப்பு மற்றும் தீவன விலையைப் பொறுத்து மாறுபடுகிது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால், மொத்தச் செலவில் 70% தீவனத்திற்கே செலவாகிறது. மக்காச்சோளம் மற்றும் சோயா புண்ணாக்கு விலையேற்றத்தால் இந்தச் செலவு அதிகமாக உள்ளது. ஒரு கோழிக்குஞ்சு ₹25 முதல் ₹40 வரை விற்பனையாகிறது. மின்சாரம், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் தொழிலாளர் கூலி என பல்வேறு பராமரிப்பு செலவுகள் ஏற்படுகின்றன. அதேபோல் வளர்ப்பின் போது 3% முதல் 5% கோழிகள் இறக்கக்கூடும், இதுவும் நஷ்டத்தில் சேரும்.

ஒட்டுமொத்தமாக பண்ணையாளர்களுக்கு ஒரு கிலோ கோழிக்கு ₹100 செலவாகும் நிலையில், சந்தையில் கொள்முதல் விலை ₹70 அல்லது ₹80-க்குச் சரிந்துவிடுகிறது. இதனால் கிலோவிற்கு ₹20 முதல் ₹30 வரை நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
இது ஒருபுறம் எனில், ரிய நிறுவனங்கள் பண்ணையாளர்களுக்குக் குஞ்சுகளையும் தீவனத்தையும் கொடுத்து வளர்க்கச் சொல்கின்றன. இதற்கு பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும் 'வளர்ப்பு கூலி' மிகவும் குறைவாக கிலோவிற்கு ₹6 - ₹8 இருப்பதாகப் பண்ணையாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனை ₹12 ஆக உயர்த்தக் கோரி போராட்டங்கள் நடக்கின்றன. அதேபோல் மத்திய அரசு மக்காச்சோளம் ஏற்றுமதிக்குத் தடை விதிக்காததால், உள்நாட்டில் தீவன விலை உயர்ந்துவிட்டது. இதைக் குறைக்கக் கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்துகிறார்கள். கோழி விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஒரு சில பெரிய நிறுவனங்களின் கையில் இருப்பதை எதிர்த்துச் சிறு பண்ணையாளர்கள் போராடுவது இன்று வரை தொடர்கிறது.
கோழி வளர்ப்பு கூலியை கிலோவிற்கு ₹12 முதல் ₹15 வரை உயர்த்த வேண்டும், மின்சாரக் கட்டணத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் வழங்கப்பட வேண்டும், கோழித் தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம் மற்றும் சோயா ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள் கறிக்கோழி உற்பத்தியாளர்கள். இந்தப் போராட்டங்கள் காரணமாகச் சந்தைக்குக் கோழி வரத்து குறைந்து, சில்லறை விற்பனை நிலையங்களில் இறைச்சி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த பிரச்சனையில் தற்போது தமிழக அரசு தலையிடடிருக்கிறது.
தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 50-55 கோடி கறிக்கோழி வகைக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 20 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர்.
கறிக்கோழி உற்பத்திச் செலவு உள்ளிட்ட, சிரமங்கள் குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியதன் அடிப்படையில், டிசம்பர் 29, 21 ஆகிய தேதிகளில் கால்நடை பராமரிப்பு இயக்குநர் நடத்திய கூட்டத்தில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களிடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கிடையே உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒப்பந்த விதிகளுக்குட்பட்டே தீர்வு காண முடியும் என சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப்பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசித்து உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்திற்கான வழிவகைகள், வளர்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.
உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கிடையேயான பிரச்சனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications