பயமா இருக்கா.. பயங்கரமா இருக்க போகுது.. கொங்கு மண்டலத்தில் விளாசிய திமுக.. ஆபரேஷன் 2024!
கோயம்புத்தூர்: திமுகவின் ஓராண்டு ஆட்சியை கோவையில் திமுக சார்பாக ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 1 ஆண்டு நிறைவு பெறுகிறது. இதை தமிழ்நாடு முழுக்க திமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று 1 வருடம் ஓடிவிட்டது.

தமிழ்நாடு திமுக
இதை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு முழுக்க திமுகவினர் வெகுவாக கொண்டாட்டங்களை மேற்கொண்டனர். திமுக நிர்வாகிகள் பலர் சாலைகளில் மக்களுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடினர். அதேபோல் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியும் திமுகவினர் கொண்டாடினார்கள். இன்னொரு பக்கம் திமுகவினர் இந்த நிகழ்வை பெரிதாக பொதுக்கூட்டம் நடத்தி கொண்டாட உள்ளனர். அரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

ஓயாத உழைப்பு
ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை என்ற தலைப்பில் விளக்க பொதுக்கூட்டங்கள் மே 8 முதல் 22 வரை நடைபெற உள்ளது. இதற்காக கழக சிறப்பு சொற்பொழிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மூலம் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. ஓராண்டு ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் திமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள் சில இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

கோவை திமுக
கோவையை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகி மதுசூ சார்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் என்ன பயமா இருக்கா.. 2024 இன்னும் பயங்கரமா இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் சமீபத்தில் இந்த வசனம் பிரபலம் ஆனது. இதைத்தான் குறிப்பிட்டு அந்த போஸ்டர் ஓட்டப்பட்டு இருக்கிறது. திமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இதில் இடம்பெற்று உள்ளன.

கொங்கு மண்டலம்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக சிறப்பாக செயல்பட்டது. அதன்பின் சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக கொங்கு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்த கொங்கு மண்டலத்தையும் திமுக வாஷ் அவுட் செய்தது. இந்த நிலையில்தான் கோவையில் தற்போது 2024 பயங்கரமா இருக்கும் என்று 2024 லோக்சபா தேர்தலை குறிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications