தமிழகத்தில் அனல் பறக்க காத்திருக்கும் கோவை தொகுதி- 28 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றுமா திமுக?
கோவை: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் (கோவை) தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் கோவையை எப்படியும் கைப்பற்றுவோம் என களமிறங்கிய திமுகவுக்கு கடும் போட்டி காத்திருக்கிறது என்கிறது கள நிலவரம்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமாக திகழ்வது கோவை. கோயம்புத்தூர் லோக்சபா தொகுதியானது பல்லடசம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. கோவை லோக்சபா தொகுதியில் 6 முறை இடதுசாரிகள் (சிபிஐ, சிபிஎம்) வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும் திமுக 2 முறையும் பாஜக 2 முறையும் அதிமுக 1 முறையும் வென்றுள்ளன.

1980 லோக்சபா தேர்தலில் திமுகவின் மோகன் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். இதற்குப் பின்னர் 1996-ம் ஆண்டுதான் திமுகவின் ராமநாதன் இத்தொகுதியில் வென்றார். 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுகவின் சுப்பையன், பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனிடம் 1,44,676 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 1999-ம் ஆண்டு முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு, பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனிடம் 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால் 2004-ல் சிபிஐ கட்சியின் சுப்பராயன், பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனை 1,64,505 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 2009-ல் சிபிஎம் கட்சியின் பிஆர் நடராஜன்- காங்கிரஸ் கட்சியின் பிரபுவை 38,664 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவின் நாகராஜன், பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணனை 42,016 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தேர்தலில் திமுகவுக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிபிஎம் கட்சியின் நடராஜன் மீண்டும் வென்றார். இந்த தேர்தலிலும் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவினார், மக்கள் நீதி மய்யம் கட்சி 3-வது இடம் பிடித்தது.
கோவை தொகுதியைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மநீம ஆகிய அனைத்து கட்சிகளுக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் இப்போது ஒரே கூட்டணியில் உள்ளன. பாஜகவுக்கு தனித்த செல்வாக்கு உள்ள தொகுதிகளில் கோவையும் ஒன்று. அதே நேரத்தில் அதிமுக- பாஜக ஆகியவை தனித்தனியாக களம் காண்கின்றன. மேலும் நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கிறது. திமுக தமது சொந்த பலத்தை விட அத்தனை கூட்டணி கட்சிகளின் முழு பலத்தையும் மொத்தமாக நம்பி கோவையில் களமிறங்கி இருக்கிறது. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவையை கைப்பற்றியாக வேண்டும் என்ற திமுகவின் வியூகம் என்னவாகும் என்பது தெரியவரும்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி












Click it and Unblock the Notifications