கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனியாரிட்டிக்கு பிரியாரிட்டி! கண்ணப்பனை பார்த்ததும் முதல்வர் ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா?

Google Oneindia Tamil News

கோவை: திமுகவில் சீனியர்களுக்கு எப்போதுமே உரிய மரியாதை வழங்கப்படும் என்பதை தாமே முன்னுதாரணமாக இருந்து கட்சியினருக்கு உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கோவை மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன் தனது அருகில் வந்து வணக்கம் வைத்ததை பார்த்த முதல்வர் ஸ்டாலின், தாமதிக்காமல் அந்த நொடியே எழுந்து நின்று பதில் வணக்கம் வைத்து அவரை இருக்கையில் அமர வைத்தார்.

திருமண விழா மேடையில் அமர்ந்து இந்த நிகழ்வை பார்த்த அமைச்சர்களும், நிர்வாகிகளும் இதனை தங்களுக்கான பாடமாக எடுத்துக் கொண்டனர்.

 திண்டுக்கல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை துணிச்சலுடன் மீட்ட போலீசார்! திண்டுக்கல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை துணிச்சலுடன் மீட்ட போலீசார்!

சீனியர்களுக்கு மரியாதை

சீனியர்களுக்கு மரியாதை

திமுகவில் சீனியர்களுக்கு மரியாதை தரப்படுவதில்லை என்ற புகைச்சல் மாவட்ட வாரியாக எழுந்துள்ளது. குறிப்பாக அண்மையில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தக் குற்றச்சாட்டு பரவலாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திமுகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை எப்போதுமே உண்டு என்பதை தனது செயலால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கோவை நிகழ்வு

கோவை நிகழ்வு

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் இல்ல மண விழாவில் கலந்துகொள்ள வந்த திமுகவின் மூத்த முன்னோடியான மு.கண்ணப்பன், கூட்ட நெரிசல் காரணமாக முதலமைச்சர் மேடையில் அமர்ந்த பிறகு தான் மேடைக்கு வந்தார். அப்போது இருக்கைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. மேடைக்கு இடதுபக்கம் கடைசியாக இருந்த நாற்காலியில் அவர் அமர்வதை கவனித்த அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், முதல்வரின் அருகில் இருந்த தனது இருக்கையில் இருந்து எழுந்து அங்கு வந்து அமருமாறு அழைத்தார்.

கண்ணப்பன் வணக்கம்

கண்ணப்பன் வணக்கம்

முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் சென்ற கண்ணப்பன் அவருக்கு வணக்கம் வைத்த நிலையில், உடனடியாக அந்த நொடியே முதல்வர் எழுந்து நின்று பதில் வணக்கம் வைத்து தனது அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்தார். இது ஒரு சாதாரண நிகழ்வு தான். ஆனால் இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் கட்சியினருக்கு கூறியுள்ள மெஸேஜ் வலிமையானது. கட்சி நிகழ்வுகளில் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்க வேண்டும் என்பதை முன்னுதாரணமாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

பிரச்சனைக்கு அடித்தளம்

பிரச்சனைக்கு அடித்தளம்


பல இடங்களிலும் திமுகவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அடித்தளமே, அவர் என்னை மதிக்கவில்லை, இவர் என்னை மதிக்கவில்லை என்பது தான். இதனிடையே திமுகவில் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை ஜூனியர்கள் இனித் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Do you know what Chief Minister Stalin did when he saw Dmk senior executive Kannappan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X