தாயாக நின்றவருக்கு துரோகம் செஞ்சாங்க.. இரட்டை இலை துரோகத்தின் சின்னம்.. தினகரன் தாக்கு
கோவை: இரட்டை இலை அம்மாவின் சின்னம் அல்ல, அது துரோகத்தின் சின்னம் என்றும் இந்த தேர்தலில் நீங்கள் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இருகூர் பகுதியில் வியாழக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும், அதனால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மூன்று பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தினகரன் குற்றம்சாட்டினார்.
பாப்பம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் பேசுகையில், "தமிழகத்தை ஆண்டுகொண்டு இருக்கிற பழனிச்சாமி அண்டு கம்பெனியின் துரோகத்தால் தமிழகமே தலைகுனிந்து வெட்கப்படுகிறது. சிறைச்சாலை சென்று, சகோதரியாய், தாயை நின்று முதல்வராக்கியவருக்கே துரோகம் செய்தவர்கள். இவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எல்லா மாநில மக்களும் கேட்கிறார்கள். சசிகலா சிறைக்கு சென்ற போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்குங்கள் என்று சொன்னதால் தான் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் பதவியில் அமர்த்தியவர்களுக்கே துரோகம் செய்யும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால், ஆட்சி அதிகாரத்திலே இருக்க யாருக்கும் துரோகம் செய்யலாம் என அவர்கள் வந்துவிட்டதால், அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
துரோகத்திற்கு என்றுமே கொங்கு மண்டல மக்கள் துணை போகமாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அவர்களை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். ஆர்கே நகரில் இரட்டைஇலை அம்மாவின் சின்னம் அல்ல, அது துரோகத்தின் சின்னம் என மக்கள் எப்படி தோல்வியை தந்தார்களோ அதுபோல் தர வேண்டும்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications