சார் போஸ்ட்.. தபாலில் கடத்தப்பட்ட கஞ்சா.. ஷாக் ஆன கோவை போலீஸ்
கோவை: கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேகாலயா மாநிலத்தில் இருந்து கோவைக்கு தபால் மூலம் போதை மருந்து கடத்தி விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கோவையில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.. 2 துணை ஆணையர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர வடக்கு துணை காவல் ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை கல்லூரி மாணவர்களிடையே உள்ள போதைப் பொருள் விற்பனையை கண்காணித்து வந்தனர். ஒரு சில கல்லூரிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கினர்.
அதில் மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் இருந்து எல்எஸ்டி, போதை அட்டை, மெத்தபெட்டமைன் மாத்திரை மற்றும் கஞ்சா ஆகியவற்றை தபால் மூலம் கோவையில் விற்றது தெரியவந்துள்ளது. இதில் கஞ்சா ஒவ்வொரு பார்சலும் சுமார் 4.5 கிலோவை கடந்த ஒரு வருடத்துக்கு மேல் அனுப்பி வந்துள்ளனர்.
இந்திய தபால்துறை மூலம் எப்படி போதை மருந்து அனுப்பினார்கள் என்று காவல்துறையும், தபால்துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்.
கோவை மாநகர தெற்கு துணை ஆணையர் சரவணன் தலைமையில், கர்நாடகாவில் இருந்து கோவைக்கு போதை மாத்திரை விற்ற கும்பலை கைது செய்துள்ளோம். அதேபோல ஹரியானா மாநிலத்தில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்றனர். அந்த கும்பல்களை கைது செய்துள்ளதால், தற்போது வழித்தடத்தில் போதைப் பொருள் நடவடிக்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் போலி மருத்துவ சீட்டு மூலம் மாத்திரை விற்ற கும்பலையும் கைது செய்துள்ளோம். தற்போது ராஜஸ்தானில் இருந்து 7,500 மாத்திரைகள் கடத்திய கும்பலை பிடித்துள்ளோம் . ஒவ்வொரு மாத்திரையையும் அங்கு ரூ.60க்கு வாங்கி, இங்கு ரூ.300க்கு விற்கின்றனர். ராஜஸ்தான் கும்பலை பிடிக்காமல் இருந்திருந்தால் அவர்கள் ரூ.25 லட்சத்துக்கு மாத்திரை விற்றிருப்பார்கள்.
ரயிலில் ஏசி பெட்டியில் போதை மாத்திரை கடத்துகின்றனர். போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு உதவி ஆய்வாளரை நியமித்து போதைப் பொருள் நடவடிக்கையை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
லாட்டரியை ஒழிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 3 மாதங்களில் 6 வழக்குகளில் 25 பேரை கைது செய்து ரூ.45 லட்சத்தை முடக்கியுள்ளோம். கேரளாவை பின்னணியாக கொண்ட நெட்வொர்க்கும் பிடிபட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுளாக சைபர் க்ரைம் புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தாண்டு நடைபெற்ற ரூ.90 கோடி மோசடியில் ரூ.45 கோடி பணத்தை முடக்கி பாதுகாத்துள்ளோம். நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.10 கோடி மக்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பலர் காவல்நிலையம் வருவதற்கு தயங்குகிறார்கள். அதனால் தான் மக்களை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்று சொல்லி, நேரடியாக எங்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications