சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் கடத்தியதே நாங்கதான்.. போலீஸிடம் "வாக்குமூலம்" அளித்த 2 பேர்!
கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் குடிபோதையில் தகராறு செய்த நபர்கள் திடீரென சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான் என போதை ஆசாமிகள் இருவர் உளறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கருமத்தம்பட்டியைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் சாலையில் செல்வோர், வருவோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். அப்போது போலீஸார் வந்தனர்.
விசாரணையில் போலீஸாருக்கு உரிய பதிலை அளிக்கவில்லை. மேலும் அவர்களிடம் இருவரும் வாக்குவாதம் செய்தனர்.

ஒருவரை ஒருவர்
பின்னர் அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் மிரட்டினர். உடனே அவர்கள் நாங்கள் என்ன தப்பு செய்தோம். எதுக்கு எங்களை பிடிச்சி வச்சிருக்கீங்க என கேட்டனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன்
மேலும் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கள்தான் என கூறி போலீஸாரை அதிர்ச்சி அடைய வைத்தனர். இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு போதை தெளிய வைக்கும் சிகிச்சை செய்யப்பட்டது.

இரு மாதங்கள்
கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த இரு மாதங்கள் கழித்து நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கடை திறந்தவுடன் இருவரும் புல்லாக மது குடித்துவிட்டு போதையில் கண்டபடி உளறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு ஏன் என பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் இது போல் போதை ஆசாமிகளால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. அளவுக்கு மிஞ்சி குடித்து போவோர் வருவோரிடம் வம்பிழுக்கும் குடிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications