போதை படுத்தும் பாடு..கோவையில் நடுரோட்டில் காரை நிறுத்தி தூங்கிய நபர்..டோரை உடைத்து எழுப்பிய போலீஸ்!

கோவையில் மது போதையில் காரை ஓட்டி வந்த நபர் திடீரென போதை அதிகமானதால் காரை அப்படியே நடுரோட்டில் நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் பிசியான சாலை ஒன்றில் இன்று காலை நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு மது போதையில் தூங்கியவரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரமாக கார் அங்கேயே நின்றதால் போலீசார் கார் கண்ணாடியை உடைத்து போதையில் இருந்த நபரை எழுப்பியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்வது என ஏகத்துக்கும் மதுப்பிரியர்கள் செய்யும் அட்டகாசம் அடங்கியபாடில்லை. எல்லை மீறி செல்லும் போது போலீசார் தங்கள் பாணியில் விசாரித்து அவர்களை எச்சரித்து அனுப்புவதும் உண்டு.

மதுப்பிரியர்களின் இந்த அலப்பறைகள் தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில், கோவையில் மதுபோதையில் காரை நடு ரோட்டில் நிறுத்திவிட்டு அப்படியே தூங்கியதால் வாகன ஓட்டிகள் கடுப்பாகினர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

 நீண்ட நேரமாக நின்ற கார்

நீண்ட நேரமாக நின்ற கார்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் சாலையில் கார் ஒன்று நடு ரோட்டில் நீண்ட நேரமாக நின்றது. கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும். பிசியான இந்த சாலையில் காலை நேரத்தில் நடு ரோட்டில் நீண்ட நேரம் நின்ற காரால் போக்குவரத்து அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

காரின் ஜன்னலை தட்டிப்பார்த்தும்..

காரின் ஜன்னலை தட்டிப்பார்த்தும்..

நீண்ட நேரம் கார் நிற்பதை பார்த்து கடுப்பான வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காருக்கு அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ஒருவர் உறங்கி கொண்டு இருப்பது போல தெரிந்தது. காரின் கண்ணாடியும் முழுவதுமாக ஏற்றிவிடப்பட்டு இருந்தது. கதவையும் திறக்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எழுப்ப முயன்றனர். அப்பகுதி பொதுமக்களும் சத்தம் போட்டு காரின் ஜன்னலை தட்டிப்பார்த்தும் எந்த பயனும் இல்லை.

போதையில் உறங்கிய நபர்

போதையில் உறங்கிய நபர்

இதனால் வேறு வழியின்றி காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உறங்கிக் கொண்டு இருந்த நபரை எழுப்பி காரில் இருந்து வெளியேற்றினர். அவர் மதுபோதையில் தன்னிலை மறந்து தூங்கியது தெரியவந்தது. பின்னர் காரை அங்கிருந்து எடுத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனிடையே, காரை நடுரோட்டில் நிறுத்தி போதையில் உறங்கிய நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

காரை ஓட்ட முடியாததால்..

காரை ஓட்ட முடியாததால்..

இந்த விசாரணையில், கோவை வாகராம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றியதும் தெரியவந்தது. மன உளைச்சல் காரணமாக அதிக அளவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதும் விபத்து ஒன்றை ஏற்படுத்தி விட்டு மேற்கொண்டு காரை ஓட்ட முடியாமல் நடு ரோட்டில் காரை நிறுத்தி தூங்கியதும் தெரியவந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+