கோவையில் லாட்டரி அதிபர் மார்டினின் வீட்டில் ED ரெய்டு
கோவை: கோவையில் துடியலூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
கோவை துடியலூரில் வெள்ளைகிணர் பகுதியில் உள்ள மார்டின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறக்கும் மார்டின் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மார்டின் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. கடந்த முறை மார்டினின் மகன், உறவினர்கள், நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடந்த நிலையில் தற்போது மார்டினின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது.
கோவையை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்டின். லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார். இவர் தற்போது சென்னையில் குடியிருந்து வருகிறார். கோழை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் மார்டினுக்கு சொந்தமாக வீடு உள்ளது.
இதற்கு அருகே அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்டினின் ரூ 457 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது. சென்னையில் அவருடைய மருமகன் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கோவையில் 3 இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. அது போல் சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மார்டின் மருமகன் வீடு உள்ளிட்ட சில இடங்களிலும் அமலாக்கத் துறையினர் மே மாதம் சோதனை நடத்தியிருந்தனர்.
-
வசமாக சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்? வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம்.. விஜய் கையில் முடிவு -
சூலூர் சிறுமி கொலை வழக்கு! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறலையே! விஜய் ஆட்சியிலும் இப்படிதானா? சீமான் -
கேரள விஷு பம்பர்: ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன ஏழை முதியவர்.. சாலையோர வியாபாரிக்கு ரூ.12 கோடி அதிர்ஷ்டம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications