அதிமுகவில் அடுத்தடுத்த தோல்வி.. கோவையில் சிரித்து கொண்டே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்பி வேலுமணி

Subscribe to Oneindia Tamil

கோவை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. வேலுமணி உள்ளிட்டோர் தேர்தலில் பணியாற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி தோல்வியில் குமுறி கொண்டிருக்கிறார். அதிமுக தோல்வியடைந்த அதே நேரத்தில் வேலுமணி சிரித்த முகத்துடன் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தனர். முதல்கட்டமாக மதுராந்தகத், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றது.

edappadi-palanisamy-hurted-due-to-admk-loss-sp-velumani-spoted-with-smile-in-a-function

அதிமுக தோல்விமுகம்

இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக, இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கௌரவ பிரச்சனையாக இருந்தது. தேர்தல் முடிந்ததும், பல எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சனம் செய்தனர். திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி முயற்சித்ததாக கூறினர்.

மாறி வரும் தமிழக அரசியலில் அதிமுக தங்கள் இருப்பை தக்க வைக்க, இடைத்தேர்தல் ஒரு அக்னி பரிட்சையாக பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இரண்டு தொகுதிகளிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்தவர்களே தவெக வேட்பாளர்களாக களமிறங்கினர். அவர்கள் பிரச்சாரம் செல்லும் இடமெல்லாம் அதிமுகவினர் மூலம் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மதுராந்தகத்தில் ஆரம்பம் முதலே அதிமுக மூன்றாம் இடத்திலேயே இருந்தது.

வேலுமணியால் சிக்கல்

தாராபுரத்தில் அதிமுக முதல் 5 சுற்றுகள் முதலிடத்தில் இருந்து, பிறகு இரண்டாம் இடத்திற்கு சறுக்கி கடைசியில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சிட்டிங் தொகுதிகளில் இரண்டாம் இடத்தை கூட பிடிக்காதது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அதிமுக பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் கூட அவர்களால் வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. தவெக, திமுகவுடன் ஒப்பிடும் போது வியூகங்களில் அதிமுக சொதப்பியது.

தவெகவுக்கு அமைச்சர்கள், திமுகவுக்காக முன்னாள் அமைச்சர்கள் இறங்கி வேலை பார்த்தனர். அதிமுகவுக்கு அப்படியில்லை. திருப்பூர் மாவட்டத்தை கன்ட்ரோலில் வைத்திருந்தது முன்னாள் அமைச்சர் வேலுமணி. மற்றொரு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் ஆகியோரும் அந்த பகுதியில் அதிமுகவுக்கு முக்கிய தலைவர்களாக இருந்தனர். வேலுமணி எடப்பாடியுடனான பனிப்போரால் கட்சி நிகழ்வுகளில் விலகியிருக்கிறார்.

சிரித்த முகத்துடன்

ராதாகிருஷ்ணன், மகேந்திரன் தவெகவில் இணைந்துவிட்டனர். வேலுமணி தேர்தல் பணியாற்றவில்லை. இதனால் தொண்டர்களை வழிப்படுத்த நிர்வாகிகள் இல்லை. தாராபுரத்தில் மட்டுமாவது வெற்றி கிடைக்கும் என நினைத்த அதிமுகவினருக்கு ஏமாற்றமமே மிஞ்சியது. வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி ஒருங்கிணைந்து பணியாற்றாமல் விட்டது தோல்விக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது.

அதிமுகவினர் தோல்வியில் துவண்டிருந்த நேரம், வேலுமணி கோவை தொண்டாமுத்தூர் நடந்த விவசாய கண்காட்சியில் கலந்து கொண்டார். கண்காட்சியை தொடங்கி வைத்தவரே அவர் தான். சிரித்த முகத்துடன் கலந்து கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்களுடன் சிரித்து பேசியபடி நிகழ்ச்சியில் இருந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+