என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அணி திரண்டனர். தவெகவுக்கு ஆதரவளித்தனர். இதனால் அவர்களின் பதவியை எடப்பாடி பறித்தார். வேலுமணி எடப்பாடியிடம் சரண்டரானாலும், பழைய பதவியை அவருக்கு கொடுக்கவில்லை. வேலுமணியின் பரம எதிரியான வேலுசாமியை வைத்து, அவரின் சொந்த மாவட்டத்தில் தண்ணி காட்ட தொடங்கியுள்ளார். இதனால் வேலுமணி மிகவும் அப்செட்டாகியுள்ளார்.

நமது அம்மா நாளிதழ், நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஆகியவற்றை வேலுமணி கன்ட்ரோலில் எடுத்தார். இரண்டு ஊடகங்களிலும் எடப்பாடி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார். ஆத்திரமடைந்த பழனிசாமி, வேலுமணி டீமில் இருந்த அனைத்து நிர்வாகிகளின் பதவிகளையும் பறித்தார். அந்த இடத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை எடப்பாடி நியமித்தார்.

edappadi-palanisamy-taking-class-for-sp-velumani-in-coimbatore-via-velusamy

வேலுமணி வேலுசாமி மோதல்

எஸ்.பி. வேலுமணியிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. வேலுமணி எதிரும், புதிருமாக இருந்த முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒரு காலத்தில் மேயர், அமைச்சர், மாவட்ட செயலாளர் என்று பவர்புல்லாக இருந்த வேலுசாமியை டம்மியாக்கியதில் வேலுமணியின் பங்கு அதிகம்.

அவரை வைத்து வேலுமணிக்கு செக் வைப்பது தான் எடப்பாடியின் திட்டம். வேலுசாமி கோவை அதிமுக அலுவலகத்தை கைப்பற்றி விடக்கூடாது என்று வேலுமணி பல்வேறு திட்டங்களை வகுத்தார். திடீர் திருப்பமாக வேலுமணி அணியினர் எடப்பாடியிடம் சரண்டராகிவிட்டனர். உள்கட்சி களேபரங்களால் வேலுமணி சுமார் 3 வாரங்களாக சென்னையிலேயே முகாமிட்டிருந்தார்.

மாவட்ட செயலாளர் பதவிக்கு மோதல்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை திரும்பிய வேலுமணிக்கு அவரின் ஆதரவாளர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தனர். வேலுமணியை வரவேற்று அவரின் ஆதரவாளர்கள் நமது அம்மா நாளிதழில் அளித்த விளம்பரங்கள் மற்றும் கோவையில் ஆங்காங்கே ஒட்டியுள்ள போஸ்டர்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் என்று குறிப்பிட்டு வேலுமணியை வரவேற்றனர். வேலுமணி ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் வெளியிடும் பதிவுகளிலும் வேலுமணியை மாவட்ட செயலாளராக குறிப்பிடுகிறார்கள்.

இந்த போஸ்டர்களில் எடப்பாடி மாவட்ட செயலாளராக அறிவித்த செ.ம வேலுசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இத்தனை நாள் ஏன் எனக்கு பதவி வழங்கவில்லை என்று செ.ம. வேலுசாமி ஏற்கனவே எடப்பாடியிடம் சீறிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் இந்த மாவட்ட செயலர் பதவியை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். தன்னை மாவட்ட செயலராக நியமனம் செய்ததற்கு எடப்பாடிக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

எடப்பாடி திட்டம்

மேலும் வேலுசாமி சமூகவலைதளங்களில் வெளியிடும் பதிவுகளிலும் தன்னை மாவட்ட செயலாளர் என்கிற பதவியுடன் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறார். மேலும் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியிலும் வேலுசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார். பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் பழைய பதவிகளை பயன்படுத்த கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+