நான் முதல்வன் திட்டம்.. கோவை மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு.. சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க
கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி கடன் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கோவையில் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் பொருளாதார வசதி இல்லாத, உயர் கல்வி படிக்க முடியாத மாணவர்கள் இதில் பயன்பெறலாம் என்றும் கூறினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் நான் முதல்வன் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டப்படி ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற பயிற்சி பெற முடியும். இதேபோல் வேலைவாய்ப்பு பயிற்சி பெற முடியும். இதேபோல் திட்டத்தில் இணைந்து பயிற்சி பெற்றவர்கள் நல்ல நிறுவனங்களில் வேலைக்கும் சேர முடியும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 12ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு சேராதவர்களை கணக்கெடுக்கும் அரசு, அவர்கள் அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

படிக்காத மாணவர்களின் லிஸ்டை மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கும் அரசு, அவர்கள் ஏன் படிக்கவில்லை.. படிக்க முடியாததற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து உயர்கல்வி பயில உதவி வருகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஏனெனில் வறுமையின் காரணமாக யாரும் உயர்கல்வி படிக்காமல் விடக்கூடாது என்பதற்காகவே, மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தை மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தி வருகிறது. வறுமையின் காரணமாக படிக்க முடியாமல் உள்ள மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி கடனும் வழங்கப்படுகிறது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி கடன் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கோவை கலெக்டர் கிராந்தி குமார் பேசுகையில், "நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை, கல்விக் கடனுக்கு தேவையான ஆவணங்கள், அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வு, இலவச பயிற்சி மையங்கள், நுழைவுத் தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. இது பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் முகாம் அடிக்கடி நடத்தப்படுகிறது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 9, 19, 28-ந் தேதிகளிலும், கோவை தெற்கு பகுதியில் 12, 23, மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதி, பொள்ளாச்சி பகுதியில் 17, 26 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதிகளில் இந்த முகாம் நடக்கிறது.
இதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து உயர் கல்வி பயில தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது. மேலும், பொருளாதார வசதி இல்லாத, உயர்கல்வி படிக்கமுடியாத மாணவர்களுக்கு வங்கி கடன் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் இந்த முகாமில் வழங்கப்படும். கோவையில் உயர்கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது" இவ்வாறு கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications