"தங்கத்தை" முட்டையாகயிடும் கோழிகள்! நாமக்கல்லில் வரலாறு காணாத உச்சத்தில் கொள்முதல் விலை
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வரலாறு காணாத அளவுக்கு உயர்வு என்கிறார்கள். இதனால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் கோழிக் கறி, ஆட்டுக் கறிகளின் விலை உயர்ந்துள்ள நிலையில் முட்டையின் கொள்முதல் விலை உயர்வு, சில்லறை விலையில் எதிரொலித்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்கிறது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் மொத்தம் 1300 கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வது போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் முட்டைக்கான கொள்முதல் விலையை நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) தினசரி அறிவித்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.90 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடந்த என்இசிசி கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ 5.95 காசுகளாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டுள்ளது.
முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கொள்முதல் விலை உயர்வால் சில்லறை விலை உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கெனவே கோழி, ஆட்டிறைச்சிகளின் விலை அதிகமாக இருக்கிறது. புரத சத்துமிக்க முட்டையை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த கொள்முதல் விலை உயர்வு சாமானியர்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications