‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
கோவை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பிரதமர் மோடி பெரிய டார்க்கெட்டை வழங்கி உள்ளதோடு அவர் மீது நம்பிக்கை இருப்பதாக வெளிப்படையாக பேசியுள்ளார். இதுபற்றிய முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 39 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல பாஜக முனைப்பு காட்டுகிறது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று மாலையில் தமிழக பாஜக தொண்டர்களுடன் நமோ செயலி மூலம் உரையாடினார். ‛எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள பாஜக பூத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது தேர்தலுக்கு அவர்கள் எந்த அளவுக்கு தயாராகிவிட்டனர். மத்திய அரசின் திட்டங்கள் பற்றி அறிந்துள்ளார்களா? என்பது பற்றி கேள்விகளை கேட்டார்.
மேலும் வரும் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும், மக்கள் நலத்திட்டங்கள் பற்றி அனைவரும் எடுத்து கூற வேண்டும் என்றும், எப்படி மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்த செல்லலாம் என்பது தொடர்பாகவும் அறிவுரைகளை வழங்கினார். இந்த கலந்துரையாடலின்போது கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜகவின் பூத் தலைவர் முருகேசன் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.
அப்போது பிரதமர் மோடி அவரிடம், ‛‛உங்கள் தொகுதியின் பாஜக வேட்பாளர் யார்? பூத் பணிகள் எப்படி செல்கிறது? தற்போது உங்களுடன் எத்தனை பேர் உள்ளனர்?'' மத்திய அரசின் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளின் பட்டியல் உங்களிடம் உள்ளதா? என்று கேள்வி கேட்டார். அதற்கு முருகேசன், ‛‛இப்போது என் அருகே வானதி சீனிவாசன் இருக்கிறார். ஆண்கள், பெண்கள் என்று தலா 35 முதல் 40 பேர் உள்ளனர். அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார்'' என்றார். மேலும் மத்திய அரசு திட்டத்தில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் திட்டம் வாரியாக பட்டியலிட்டார்.
அதை கேட்ட பிரதமர் மோடி, ‛‛ரொம்ப சந்தோஷம். அண்ணாமலைக்கு முக்கிய வேலையை நான் கொடுத்திருக்கிறேன். மொத்த தமிழ்நாட்டையும் ஜெயிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களையும் ஜெயிப்பதற்கான வேலையில் அவர் இறங்கி இருப்பார். இதனால் நீங்கள் தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும். அண்ணாமலையிடம் நீங்கள் தொகுதிக்கு வர வேண்டாம். உங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது எனக்கூறி பணியாற்ற வேண்டும். அவர் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்யட்டும்.
மேலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வேட்பாளரையும் நான் அண்ணாமலையாக தான் பார்க்கிறேன். அனைவரும் வெற்றி பெற்று டெல்லி வர வேண்டும் என விரும்புகிறேன். இதனால் அண்ணாமலையின் வெற்றிக்கு நீங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்'' என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications