Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம் தேதி நடைபெற இருக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சிபிஎம், சிபிஐ கட்சிகள், கோயம்புத்தூரில் இந்த முறை போட்டியிடாமல் தவிர்த்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 74 ஆண்டுகளில் இதற்கு முன்னர் கோயம்புத்தூரில் ஒவ்வொரு தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இக்கட்சி போட்டியிடாமல் தவிர்த்திருப்பது விவாதமாகியிருக்கிறது.

Communist

முடிவுக்கு வந்த நடைமுறை

கடந்த 1952ம் ஆண்டு முதல், கோவையில் ஏதேனும் ஒரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறைந்தது ஒரு வேட்பாளர்களாவது நிறுத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் இந்த நடைமுறை முடிவுக்கு வந்திருக்கிறது.

சரிந்த செல்வாக்கு

இந்த மாவட்டம் ஒரு காலத்தில் செழிப்பான தொழில்துறை மையமாக இருந்தது. தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (என்டிசி) ஆலைகள் மற்றும் தனியார் நூற்பு ஆலைகள் இங்கு வலுவான தொழிற்சங்க கலாச்சாரத்தை வளர்த்தன. இது சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு இயற்கையான அரசியல் தளத்தை உருவாக்கியது. தொழிலாளர்கள் பிரச்சனையில் தலையீடு செய்ததன் மூலம், இரண்டு கட்சிகளுக்கும் இங்கு செல்வாக்கு அதிகமாக இருந்தது.

கோவையின் தன்மை

ஆனால், என்டிசி மற்றும் தனியார் ஆலைகளின் படிப்படியான மூடல்களால் தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் குறைத்தன. தமிழ்நாட்டின் 7 என்டிசி ஆலைகளில் 5 கோவையில் இருந்தன. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு அவை அனைத்தும் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.

கட்சிக்காரர்கள் சொல்வது என்ன?

இது குறித்து சிபிஐ கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "காலப்போக்கில், தொழிற்சங்கங்களின் பலவீனம், இந்த மாவட்டத்தில் இடதுசாரிகளின் பாரம்பரிய ஆதரவுத் தளத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது. இது குறிப்பிடத்தக்க அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 1952 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் முதல், இடதுசாரி கட்சிகள் தனித்தோ அல்லது கூட்டணியிலோ தொடர்ந்து வேட்பாளர்களை நிறுத்தி, மாவட்டம் முழுவதும் முக்கிய தொகுதிகளை வென்றுள்ளன" என்றார்.

வெற்றி வரலாறு

வரலாற்று ரீதியாக, கோவை கிழக்கு தனித்தே சிபிஎம்-க்கு 5 வெற்றிகளை கொடுத்திருக்கிறது. பேரூர் மற்றும் சிங்காநல்லூர் தலா இரு வெற்றிகளைத் தர, சிபிஐ 1980 மற்றும் 2011-ல் வால்பாறையில் வென்றது. கோவை மக்களவைத் தொகுதியிலும், சிபிஐ 5 முறை (1957, 1971, 1974, 1977, 2004) வெற்றி பெற்றது. சிபிஎம் 1967, 2009, 2019 ஆம் ஆண்டுகளில் 3 முறை வென்றது.

திமுகவின் மறுப்பு

2026 சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்தில் இடதுசாரி வேட்பாளர்கள் இல்லாததற்கு முக்கியமாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிபிஐ, சிபிஎம் கட்சிகள் திமுக கூட்டணியில் வால்பாறை மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளைக் கோரின. திமுக கொடுக்கவில்லை.

கூட்டணி தர்மம்

"இருப்பினும், கோவையில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இதற்காக எங்கள் கட்சி தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது" என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் DT next செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+