Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசிங்கப்படுத்திய எடப்பாடி? செங்கலை உருவும் செங்கோட்டையன்! எஸ்பி வேலுமணி வீட்டு விசேஷத்தில் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டது அதிமுகவில் பலரது புருவங்களை உயர வைத்திருக்கிறது. எஸ்.பி வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பனிப்போர் நிலவுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் சந்தித்து பேசி இருக்கின்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்னதாகவே செங்கோட்டையன் புறப்பட்டது மீண்டும் அதிமுகவில் மோதல் வெடித்ததன் வெளிப்பாடு என்கின்றனர் சீனியர்கள். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் செங்கோட்டையனை அவமானப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக பேசியதாகவும், அதன் காரணமாகவே எடப்பாடி வருகையை செங்கோட்டையன் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் சீனியர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி, எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோர் மன வருத்தத்தில் இருப்பதாக சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Sengottaiyan SP Velumani edappadi palaniswami

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்பி வேலுமணி இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் பாஜக அதிமுக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார். ஆனால் அதிமுகவின் பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகனும் மனைவியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எஸ்பி வேலுமணி வலியுறுத்துவதாகவும் இதனால் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி திருமண நிகழ்ச்சியை புறக்கணித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று கோவை கொடிசியா மையத்தில் எஸ்பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சத்யராஜ், சிவக்குமார், பாஜக எஸ்ஆர் சேகர், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி, சரத்குமார், ராதிகா, ஜிகே மணி, சீமான், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Sengottaiyan SP Velumani edappadi palaniswami

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு முன்னதாகவே செங்கோட்டையன் அங்கிருந்து கிளம்பி விட்டார் .அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையன் இடையே மோதல் நிலவுவதாக கூறப்பட்டநிலையில் இந்த நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எடப்பாடி வருகைக்கு முன்னதாகவே செங்கோட்டையன் கிளம்பி சென்றார். என்ன நடந்தது என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது.

நேற்று அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். குறிப்பாக சற்று கோபமாகவே அவர் பேசியதாக கூறப்படுகிறது.

Sengottaiyan SP Velumani edappadi palaniswami

பல மாவட்டங்களில் கள ஆய்வுக் கூட்டத்தி மோதல், செங்கோட்டையன் முன்னிலையில் அடிதடி சம்பவமும் நடைபெற்றது, மாபா பாண்டியராஜன் ராஜேந்திர பாலாஜி விவகாரம் தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஜெயலலித இருந்தபோது ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சி இருந்தது. தற்போது அந்த கட்டுப்பாடில்லை. கட்சியிலேயே கோஷ்டி பூசல்கள் இருக்கிறது. ஆளாளுக்கு பேட்டி கொடுக்குறாங்க.. இதெல்லாம் உடனே நிறுத்திக்கணும்.. தப்பு பண்ணா உடனடியாக கட்சியிலிருந்து தூக்கிடுவேன் என கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளுடன் பேசும் போது செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோபமாகவே அந்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளியேறினார் செங்கோட்டையன். மேலும் அதன் காரணமாகவே எஸ்பி வேலுமணியின் இல்ல விழாவில் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

பின்னணி என்ன?: அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தும் அதில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்ல. இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் விழா குழுவினரிடம் மேடையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை வைக்க வேண்டும் என கூறியும் அவர்கள் படங்கள் இல்லை எனவும், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக நிதி உதவி வழங்கியதோடு ,அதற்கு அடித்தளமாக இருந்த ஜெயலலிதாவின் படம் வைக்கப்படவில்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை என விளக்கமும் அளித்திருந்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையனின் பேச்சு புகைப்படங்கள் வைக்கப்படவில்லை என்பதற்கான அல்ல, எடப்பாடி பழனிச்சாமி மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் அது என்கின்றனர் அதிமுகவினர். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முகமாக தற்போது முன்னிறுத்தப்படுகிறார். அதிமுக மேடைகள், நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி மாவட்ட செயலாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற பேச்சு ஏற்கனவே இருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் செங்கோட்டையனின் இந்த நடவடிக்கைகள் என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+