சசிகலாவுக்கு எடப்பாடி செய்த துரோகம்.. இத கேளு! அதிமுக தொண்டரிடம் ஆறுகுட்டி ஆவேசம்! லீக்கான ஆடியோ
கோவை: சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அதிமுக தொண்டர் ஒருவரிடம் காட்டமாக பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர் ஆறுகுட்டி. கடந்த ஆட்சிகாலத்தில்
அதிமுக நிகழ்ச்சிகளில் நடனமாடியே ஊடகங்களில் கவனம் ஈர்த்தவர் ஆறுகுட்டி.
ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறுகுட்டி, எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வந்தார்.

திமுகவுக்கு தாவிய ஆறுகுட்டி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் ஆறுகுட்டி. அவர் மீது அதிமுகவினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், ஆறுகுட்டியை வேடந்தாங்கல் பறவை என எடப்பாடி பழனிசாமி சாடினார்.

அதிமுக தொண்டர் பேச்சு
இந்த நிலையில் நாகராஜ் என்ற அதிமுக தொண்டர் ஆறுகுட்டியை தொடர்புகொண்டு பேசிய உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், "உங்களுக்கு ஜெயலலிதா 2 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள். உங்களுக்காக நாங்கள் உயிரை கொடுத்து உழைத்தோம்.

ஆவேசமடைந்த ஆறுகுட்டி
ஜெயலலிதாவுக்கு இப்படி துரோகம் செய்து விட்டீர்களே. நீங்கள் ஜெயலலிதாவுக்கு நயவஞ்சகம் செய்து விட்டீர்கள்." என்று கூறினார். இதற்கு பதிலளித்த ஆறுகுட்டி, "நான் என்ன துரோகம் செய்தேன். சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை பற்றி கேள்." என்று காட்டமாக பதிலளித்தார்.

தூண்டிவிட்டுள்ளார்கள்
ஆறுகுட்டி, நாகராஜ் இடையிலான இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் பலர் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக விளக்கமளித்து இருக்கும் ஆறுகுட்டி, "நாகராஜ் எனக்கு தெரிந்த நபர்தான். செல்போனில் பேசாமல் நேரில் பேசிக்கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவித்தேன். யாரோ தூண்டிவிட்டு அவரை பேச வைத்து இருக்கின்றனர்." என்றார்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications