"அது கண்ணாடி தம்பி".. களத்தில் நீங்கதான் இல்லை.. விஜய்க்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலடி
கோவை: தமிழ்நாடு அரசியல் 2026 சட்டமன்ற தேர்தல் களத்திற்காக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று ஈரோடு சென்றிருந்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்த விஜய், களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கு சம்மந்தம் இல்லாதவர்கள் குறித்து எல்லாம் பேச மாட்டேன் என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக தமிழிசை செளந்தரராஜன், விஜய் தான் களத்தில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பாஜக - அதிமுக தேசிய ஐனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள்
ஜனநாயகத்தின் குரல்வலை தொடர்ந்து நெரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள் கைது
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடிய பூரண சந்திரன் தனது உடலில் தீயை பற்றி உயிர் நீத்துள்ளர். இதற்கு தமிழ்நாடு முதலைச்சர் மு.க. ஸ்டாலின் அவசியம் பதில் சொல்லியாக வேண்டும். தங்களின் உரிமைகளுக்காக தூய்மைப் பணியாளர்களை கைது செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்சனை இல்லை. அது ஈகோவால் எழுந்துள்ள பிரச்சனையாம். திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதியையே குற்றம் சாட்டுவது மிகவும் தவறான செயல். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் குறித்து பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. கடவுள் முருகன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்ததாக எல்லாம் சிலர் பேசுகின்றனர்.
மஞ்சள் நகரம்
நான் ஒரு பெண் அரசியல்வாதி, அரசியல் தலைவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்வது குறித்து எல்லாம் நான் பேச முடியாது. எல்லாவற்றையும் மக்கள் கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் ஸ்டாலின் அரசு மக்கள் முன் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
தவெக தலைவர் விஜய் ஈரோட்டை மஞ்சள் நகரம் என்ற கூறியுள்ளார். அந்த மஞ்சளுக்கான வாரியத்தை அமைத்தது மத்திய பாஜக அரசு. எனவே மஞ்சள் நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் தன்னுடைய 10 வயதிலிருந்து மக்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறுகிறார். அப்படி பார்த்தால் 25 வருடங்களுக்கும் மேலாக மக்கள் சேவை செய்து வரும் எங்களுக்கு மக்களுடன் எந்தளவு தொடர்பு இருக்கும் என்பதை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
களத்தில் நீங்கதான் இல்லை
அரசியல் களம் குறித்து விஜய் பேசியுள்ளார். உண்மையில் விஜய் தான் களத்தில் இல்லை. திடீரென வருகிறார். திடீரென காணாமல் போகிறார். எனவே விஜய் தன்னை தான் களத்திற்கு சம்மந்தமில்லாதவர் என சொல்லியுள்ளார் என நினைக்கிறேன்.
இந்தியாவில் பாஜக பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. உலகின் சிறந்த பி்ரதமராக நநேந்திர மோடி உள்ளார். எனவே அவர் கூறுவது எங்களுக்கு பொருந்தாது. மகாத்மா காந்தியை திமுக உரிய முறையில் கொண்டாடவில்லை. அவர்கள் அறிவாலயத்தில் தேசியக் கொடி கூட ஏற்றவில்லை. மகாத்மா காந்தி ஊழலற்றவர் என்பதில் மாற்று கருத்து இல்லை.
பிற்போக்கு இயக்கங்கள்
ஆனால் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் நடந்தது நம் தமிழகத்தில்தான். காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. முற்போக்கு இயக்கங்கள் என்ற பெயரை மாற்றி, பிற்போக்கு இயக்கங்கள் என்று சொல்ல வேண்டும். சரஸ்வதி நாகரிகம் வரலாற்றில் உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பின் அடையாளம். அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
தீய சக்தி திமுக
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தில் தப்பக்க முடியாது. இது ஏதோ தேர்தல் நேரம் என்பதால் வழக்குகள் போடப்படவில்லை. அவை எப்போதும் தொடரும் நடைமுறை. உதயநிதிக்கு இது எல்லாம் புரிகிறதா இல்லையா என்பது தெரியவில்லை. அவருக்கு எழுதித் கொடுப்பவர்கள் எதுகை, மோனையில் எழுதித் தருகிறார்கள்.
திமுக ஆட்சியில் கருணாநிதி பெயரை அனைத்திற்கும் வைத்துள்ளனர். அதற்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்கலாமே. தீய சக்தி திமுக என்பது சரித்திரத்தில் எழுதப்பட்ட வார்த்தை. நான் அனைத்து மதங்களுக்கும் ஆதரவாக பேசுவேன். ஆனால் பைபிளை பாராட்டி பகவத் கீதையை எதிர்ப்பது தவறு."என்றார்.
-
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications