கோயம்புத்தூரில் மாமூல் கேட்டவர்களுக்கு தரமான பதிலடி.. அரசு அதிகாரிகளை ஆடிப்போக வைத்த லாரி டிரைவர்கள்
கோவை: கோவை போத்தனூர் மலுமிச்சம்பட்டி அருகே ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து லாரிகள் மூலம் கல் உள்ளிட்ட கனிம பொருட்கள் ஏற்றிக் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி அனுமதி சீட்டுகள் வாங்கி லாரிகள் இயங்கி வருகின்றன. அப்படி இயங்கி வந்தபோதிலும், லாரிகளை மறித்து சிலர் மாமூல் கேட்டதால் டிரைவர்கள் மொத்தமாக லாரிகளை நிறுத்தி தரமான சம்பவம் செய்தனர்.
கோவையில் போத்தனூர் மலுமிச்சம்பட்டி அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து லாரிகள் மூலம் கல் உள்ளிட்ட கனிம பொருட்கள் ஏற்றிக் கொண்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல் கேரளாவிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக அரசு நிர்ணயித்த தொகையை செலுத்தி அனுமதி சீட்டுகள் வாங்கி லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.

உள்ளூர் வரி
மலுமிச்சம்பட்டி பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் கற்கள் மற்றும் எம்-சாண்ட் ஏற்றிச் செல்கின்றன. இந்த லாரிகளைச் சட்டவிரோதமாக வழிமறித்து, "உள்ளூர் வரி" அல்லது "சங்கக் கட்டணம்" என்ற பெயரில் சிலர் பணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் லாரி டிரைவர்களிடம் கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் மாமூல் கேட்டு கட்டாயமாக வசூலித்து வந்தததாக கூறப்படுகிறது.
மாமூல் பிரச்சனை
இதனால் ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சந்தேககவுண்டன்சாவடி அருகே சில மாதங்களுக்கு முன்பு லாரிகளை ரோட்டில் நிறுத்தி போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகும் மாமூல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இது போன்ற வசூலில் ஈடுபட்ட சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கடந்தகாலங்களில் வழக்குத் தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணம் பறிப்பு
விதிமீறி இயங்கும் குவாரிகள் மற்றும் லாரிகளைச் சுட்டிக்காட்டி மிரட்டுவதும், சில இடங்களில் அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் பறிப்பதும் நடப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது ஆன்லைன் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இத்தகைய செயல்கள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சாலை ஸ்தம்பித்தது
இந்த நிலையில் செட்டிபாளையம்- மலுமிச்சம்பட்டி ரோட்டில் நேற்று முன்தினம் கல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து சிலர் மாமூல் கேட்டனர். உடனே டிரைவர்கள் ரோட்டில் லாரிகளை நிறுத்தி விட்டார்கள். பின்னர் அவர்கள் லாரி உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சுமார் 10 டிப்பர் லாரிகள் ரோட்டில் அணிவகுத்து நின்றன.
வாக்குவாதம்
இதையடுத்து மாமூல் கொடுத்தால் லாரியை எடுக்க விடுவோம் என்று அந்த கும்பல் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மாமூல் கேட்டவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாமூல் கொடுக்க முடியாது
இது குறித்த தகவலின் பேரில் கனிமவளத்துறை துணை தாசில்தார் கணேஷ், செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அவர்களிடம் லாரி உரிமையாளர்கள், அரசுக்கு உரிய தொகை செலுத்தி அனுமதிச்சீட்டு பெற்று தான் லாரிகளை இயக்கி வருகிறோம். எனவே யாருக்கும் மாமூல் கொடுக்கமாட்டோம் என்று கூறினர்.
நடவடிக்கை தேவை
உடனே போலீசார் அவர்களிடம் இருந்த அனுமதிச்சீட்டை வாங்கி பார்த்தனர். அதில், லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதிச்சீட்டு பெற்று வாகனங்களை இயக்குவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரிகளை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து டிரைவர்கள் லாரிகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். மாமூல் கேட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications