கோவை அன்னூரில் கள்ளக்காதல்.. புகாரை விசாரித்த போலீசுக்கு டிரைவரால் நடந்த பெரிய சோதனை
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் குமார் டிரைவர் ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்குமாருக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்த 2 பெண் குழந்தைகளின் தாயான வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளதாம். இந்நிலையில் கள்ளக்காதல் விவகாரம் குறித்து மனைவி புகார் அளித்தார். இதனால் ரமேஷ் மற்றும் காதலியை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் என்ன நடந்தது தெரியுமா?
கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவனை பிரிந்த பெண்கள், குழந்தையுடன் வறுமையை எதிர்கொள்ளும் நிலையில், சில ஆண்கள், பணம், செல்வாக்கு, சந்தோஷம், ஆறுதல் கரம் நீட்டுகிறார்கள். இதனால் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கும் சில பெண்கள், ஆண்களின் வலையில் சிக்கி விடுகிறார்கள். ஒரு சில பெண்கள், தனக்கு ஆதரவு தரும் ஆண்களை தங்கள் வலையில் வீழ்த்தி விடுகிறார்கள். இது ஏற்கனவே திருமணம் ஆகி சந்தோஷமாக வசித்து வாழ்ந்த குடும்பத்தில் புயலை வீசுகிறது.

கள்ளக்காதலிக்கு செலவு செய்கிறார்கள்
மனைவிக்கு பதில் கள்ளக்காதலிக்கு செலவு செய்வது, கள்ளக்காதலிக்காகவே வாழ்வது, குடும்பத்தை மறந்து, குழந்தைகளை மறந்து, கள்ளக்காதலியுடன் செல்வதற்கு தயாராகிவிடுகிறார்கள். இதனால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போகிறது. அதேபோல் தான் கள்ளக்காதலில் விழுந்த பெண்ணின் குடும்பமும், அவமானத்தால் உடைந்து போகிறது. இந்த விவகாரத்தில் போலீஸ் தலையிட்டு எச்சரித்தாலும், எந்த தீர்வும் கிடைப்பது இல்லை..
கள்ளக்காதலுக்கு தண்டனை இல்லை
ஏனெனில் சட்ட ரீதியாக கள்ளக்காதலுக்கு தண்டனை கிடையாது. ஒரே வழி விவகாரத்து வாங்கி பிரிந்து தான் போக முடியும் என்ற சிக்கல் இருப்பதால், பல குடும்பங்கள் சிக்கலை சந்திக்கின்றன. முறைகேடான உறவால் அவமானத்தையும், பொருளதார இழப்பையும் சந்திக்கின்றன. கள்ளக்காதல் செய்வோரும் சமூகத்தில் அவமானத்தில் தவறான முடிவெடுக்கிறார்கள். கோவை அன்னூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கோவை அன்னூர் கள்ளக்காதல்
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த 34 வயதாகும் ரமேஷ்குமார் டிரைவர் ஆவார். டிரைவர் ரமேஷ் குமாருக்கு கல்யாணம் ஆ மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். டிரைவர் ரமேஷ்குமாருக்கும், அதே பகுதியில் கணவரை இழந்து வாழ்ந்த 2 பெண் குழந்தைகளின் தாயான வடமாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த பழக்கத்தால் எல்லை மீறி உள்ளனர். அதனால் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவரும் அடிக்கடி சந்தித்து சந்தோஷமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் டிரைவர் ரமேஷ்குமாரின் மனைவிக்கு தெரியவந்தது. அவர் கோவை மாவட்டம் அன்னூர் போலீசில் புகார் கொடுத்தார்.
எச்சரித்த போலீசார்
அன்னூர் போலீசார் ரமேஷ்குமார் மற்றும் அவரது கள்ளக்காதலியை அழைத்து எச்சரித்தனர். பின்னர் டிரைவர் ரமேஷ்குமாருடன் பேசுவதை கள்ளக்காதலி தவித்தார். மேலும் தனது 2 பெண் குழந்தைகளுடன் வேறு பகுதிக்கு போய்விட்டார். ஆனாலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு ரமேஷ்குமார் தொந்தரவு செய்து வந்தார். மேலும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து தாக்கியதாக தெரிகிறது.
டிரைவர் எடுத்த முடிவு
அத்துடன் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டினார். இதை அறிந்து அங்கு வந்த அன்னூர் போலீசார், ரமேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். ஆனாலும் அவர் அருகில் வந்தால் தீக்குளித்து உங்களையும் கட்டிப்பித்து எரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். போலீசார் அவரை தடுத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications