பேஸ்புக் காதலனை சந்திக்க கால்டாக்ஸி டிரைவரிடம் உதவி கேட்ட மாணவி.. நடந்த விபரீதம்

Subscribe to Oneindia Tamil

கோவை: ஃபேஸ்புக் நண்பரை திருச்சி சென்று சந்திக்க விரும்பிய 17 வயது மாணவி தனக்கு ஏற்கெனவே பழக்கமான கால் டாக்ஸி டிரைவரிடம் கேட்டுள்ளார். அவருடைய அறியாமையை பயன்படுத்திய கால் டாக்ஸி டிரைவர் ஊட்டிக்கு அழைத்து சென்று 3 நாள்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனிடையே திருச்சிக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவரது காதலனும் 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

17 வயது மட்டுமே நிரம்பிய அந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு கொடூரர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

பேஸ்புக் பழக்கம்

பேஸ்புக் பழக்கம்

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11 - ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் கடலூரை சேர்ந்த 27 வயதான ஏழுமலை என்பவர் பழக்கம் ஆகி உள்ளார்.

திருச்சியில் சந்திக்க முடிவு

திருச்சியில் சந்திக்க முடிவு

ஏழுமலையும் 11ம் வகுப்பு மாணவியும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் மாணவி, தனது காதலன் பேஸ்புக் காதலன் ஏழுமலையை சந்திக்க விரும்பி இருக்கிறார். செல்போனில் பேசிய படி திருச்சியில் இருவரும் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கால்டாக்ஸி டிரைவர்

கால்டாக்ஸி டிரைவர்

தன் ஃபேஸ்புக் காதலனை திருச்சி சென்று சந்திக்க விரும்பிய மாணவி தனக்கு ஏற்கெனவே பழக்கமான கால் டாக்ஸி டிரைவர் சண்முகத்திடம் உதவி கேட்டிருக்கிறார். இதை வைத்து மாணவியை அடைய விரும்பிய சண்முகம் ,மாணவியை மிரட்டி ஊட்டிக்கு அழைத்து சென்று ஹோட்டலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் மூன்று நாள்கள் கழித்து மாணவியை திருச்சிக்கு அழைத்து சென்று ஏழுமலையிடம் ஒப்படைத்திருக்கிறார்.

3 நாட்கள் பலாத்காரம்

3 நாட்கள் பலாத்காரம்

ஆனால் திருச்சியில் அறை எடுத்த ஏழுமலை மாணவியை 3 நாள்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று அங்கு தங்கியுள்ளார். இந்த சூழலில் மாணவியின் பெற்றோர் தங்கள் மகள் காணாமல் போனது குறித்து கோவை செல்வபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்கள்.

கால்டாக்ஸி டிரைவர் கைது

கால்டாக்ஸி டிரைவர் கைது

கோவை செல்வபுரம் போலீசார் மாணவியின் செல்போன் டவரை வைத்து வேளாங்கண்ணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக , வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ஏழுமலையிடமிருந்து மாணவியை போலீசார் மீட்டனர். வழக்கு பதிவு செய்த போலீசார், கால் டாக்ஸி ஒட்டுநர் சண்முகம், ஏழுமலை ஆகியோர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+