கோவையில் பர்தா அணிந்து வீடியோ எடுத்து சேட்டை.. சிக்கலில் யூடியூபர்
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பர்தா அணிவித்து வீடியோ எடுத்த யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பர்தா அணிந்து வீடியோ எடுத்ததற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். என்ன நடந்தது.. அவர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு யூடியூபர்கள் பலரும் பல விதமான முயற்சிகளில் இறங்கி வியூஸ் பார்க்க முயற்சிக்கிறார்கள் . மக்களிடம் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெரிதும் வரவேற்பு இருக்கிறது. கோமாளித்தனம் செய்வது, நல்ல அறிவுபூர்வமான தகவல்களை பகிர்வது, கேலி செய்வது, வித்தியாசமான கேள்விகளை கேட்டு மக்களை குழப்புவது, மக்களை கோபப்பட வைக்கும் வகையில் கேள்வி கேட்பது, போன்ற பல்வேறு விஷயங்கள் மூலம் சில யூடியூபர்கள் வியூஸ் பார்க்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். யூடியூபை பொறுத்தவரை அதிகம் யூஸ் கிடைத்தால் வருமானம் அதிகமாக கிடைக்கும் என்பதால், வியூஸ் அடிப்படையில் பலரும் மக்களை திசை திருப்பும் வகையில் வீடியோக்கள் மற்றும் செய்திகளை சிலர் வெளியிட்டு வருகிறார்கள்.

அப்படித்தான் கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதைப்பற்றி பார்ப்போம். கோவையை சேர்ந்த 22 வயதான அனாஸ் அகமது யூடியூபர் ஆவார் . இவர், கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து, உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளார். அத்துடன் அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரையை போல் பலரும் வாக்கிங் செய்தும் பகுதியாகும். இங்கு இரவு பகல் என எல்லா நேரமும் பலரும் நடைபயிற்சி செய்வார்கள். அங்கு பெண்களிடம் பர்தா அணிவித்து யூடியூப் செய்த வேலை பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு கோவையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனாஸ் அகமதுவை கைது செய்தனர். நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் இடையூறு செய்து இதுபோன்று வீடியோ எடுக்கக்கூடாது என்றும், அதையும் மீறி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதள பதிவாளர்களுக்கு கோவை போலீசார் எச்சரித்து உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications