தமிழ்நாட்டின் முதல் "லுலு" மார்க்கெட்.. அசத்தும் கோவை.. தங்க காசு வேணுமா? தீபாவளி ஜாக்பாட் விடாதீங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டின் முதல் "லுலு ஹைப்பர்" மார்க்கெட் என்ற பெயரை பெற்ற நிலையில், தீபாவளி அதிரடியை அறிவித்திருக்கிறது கோவையின் லுலு மால். என்ன அது?

தொழில்துறையாகட்டும், கல்வியாகட்டும், மருத்துவ துறையாகட்டும், அனைத்திலுமே கோவை மாவட்டம் முன்னேறி வருகிறது.. இவைகளை மையமாக வைத்தே, வர்த்தக நோக்கத்தில், கோவையில் லுலு மால்களை கட்ட அன்றே முடிவானது..

First in Tamil Nadu Lu Lu Hypermarket in Coimbatore and Half gram gold coin for Newly married couple

அதன்படி, கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்து முடிந்து, லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடித்து, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால்கள்: ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும்கூட, அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..

இந்த மால் துவக்கப்பட்டதிலிருந்தே, விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதனால், மற்ற நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்படுவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமல்ல, வார நாட்களில் லுலு மாலுக்கு வரும் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது என்று சொன்னார்கள். ஆனால், நாளுக்கு நாள் கூட்டம் பெருகியபடியே உள்ளதாம். அதுவும் இப்போது பண்டிகை காலம் துவங்கிவிட்டதால், கடந்த சில மாதங்களாகவே, ஹைப்பர் மாலுக்குள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

துவங்கியது ஆஃபர்கள்: இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகையும் வரப்போவதால், தமிழகத்தின் கடைகளில், ஆஃபர்கள் போடப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், கோவை லுலுவிலும் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு, 60 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, இன்னொரு ஜாக்பாட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜெக்ஸ் என்ற புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அறிமுக விழா நடந்து முடிந்துள்ளது. அதாவது, havells, Bosch, dcl, vidiem, போன்ற நிறுவனங்களின் புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாம். இதன்படி, 5000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோருக்கு, 500 ரூபாய்காண பரிசு கூப்பன் தரப்போகிறார்களாம்.

50 தம்பதிகள்: அதுவும், புதிதாக திருமணமான 50 தம்பதிகளுக்கு, ரூ.1999 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் அரை கிராம் தங்க காசு பரிசாக வழங்கப்போகிறார்களாம்.. இதற்கான வினாடி வினா போட்டி 11ம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லுலுவுக்குதான் இதுதான் முதல் தீபாவளி. அந்தவகையில் புதுமண தம்பதிகளுக்கும் இதுதான் முதல் தீபாவளி என்பதால், டபுள் குஷியில் திளைத்து காணப்படுகிறது கோவை மாவட்டம்.. பரிசு கூப்பனையும், தங்க காசு சலுகையும் அள்ள போகும் அந்த புதுமண தம்பதி யார்? தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..!!அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+