கோவை அவினாசி சாலை.. டிக் அடிக்கப்பட்ட 5 பகுதிகள்.. வரும் பிரம்மாண்ட பிளான்.. அடடே செம

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையின் மிக முக்கிய சாலையான அவினாசி சாலையில் அதிகரிக்கும் டிராபிக் நெரிசலைக் கருத்தில் கொண்டு அங்கு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே பாலத்திற்குக் கீழே பொதுமக்கள் அவினாசி சாலையில் 5 இடங்களில் முக்கிய மாற்றம் வரப் போகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கோவை மேஜர் மாற்றத்திற்குத் தயாராகி வருகிறது.

கோவை நகரில் மிக முக்கிய சாலையாக இருப்பது அவினாசி சாலை.. கோவை மக்கள் வெளியூர் செல்ல இந்த சாலை மிக முக்கியமானது. மேலும், பல முக்கிய நிறுவனங்களும் இதில் தான் செயல்பட்டு வருகிறது.

Coimbatore traffic tamil nadu

கோவை மேம்பாலம்: இதனால் இந்த அவினாசி சாலையில் எப்போதும் டிராபிக் நெரிசல் அதிகமாகவே இருக்கும்.. குறிப்பாக லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு பகுதிகளைக் காலை மற்றும் மாலை நேரங்களில் தாண்டவே அதிக நேரம் ஆகும். இதற்கிடையே இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கு அவினாசி சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த 10.1 கிலோமீட்டர் தூர அவினாசி மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பாக மற்றும் எளிதாகச் சாலையைக் கடக்க ஏதுவாக லிஃப்ட் வசதியுடன் கூடிய ஐந்து பாலங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. முதலில் எஸ்கலேட்டர்கள் உடன் இந்த பாலங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அதற்கு ஓவர் செலவாகும் என்பதால் எஸ்கலேட்டர்களுக்கு பதிலாக லிஃப்ட் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் மாற்றம்: அவினாசி சாலையில் அதிகரிக்கும் டிராபிக் நெரிசலைக் குறைக்க பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிமீ தொலைவிற்கு சுமார் ரூ.1,621 கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அந்த மேம்பாலத்திற்குக் கீழே பொதுமக்கள் கடக்கும் இந்த மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக இரண்டு பகுதிகளில் இந்த பாலங்கள் கட்ட முடிவு செய்துள்ளனர். அங்கு எந்தளவுக்கு இவை உதவியாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு இதை மற்ற தேவைப்படும் இடங்களிலும் பாலங்களைக் கட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் ஏர்போர்ட் சந்திப்பு அருகே லிஃப்ட் உடன் கூடிய பாலங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.

எங்கே அமைகிறது: முதலில் இந்த இரண்டு இடங்களில் பாலத்தை அமைத்து அவை எந்தளவுக்குப் பலன் தருகிறது என்பதை ஆராய உள்ளனர். அதைத் தொடர்ந்து அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் சந்திப்பு, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு ஆகிய இடங்களில் பாலங்களை அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

நெடுஞ்சாலைத் துறை இந்த இடங்களில் பாலங்களை அமைக்க முடிவு செய்துள்ள நிலையில், கோவை மாநகராட்சி சார்பிலும் இரண்டு இடங்களில் இந்த பாலங்களைக் கட்ட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக காந்திபுரம், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளிலும் இதுபோன்ற பாலங்கள் ஏற்படுத்தக் கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் இப்போது தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+