காட்டாற்று வெள்ளம்.. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த மழை நீர்.. தீவிர கண்காணிப்பு!
கோவை: உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏற்பட்ட கனமழையின் காரணமாக திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு பக்தர்கள் யாரும் இல்லை. கோவில் நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலும், மலையின் உச்சியில் இருந்து கொட்டும் பஞ்சலிங்க அருவியும் பிரசித்தி பெற்றவை. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்புப் பகுதிகளான மலை கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அருவிக்கு வரும் நீரின் அளவு திடீரென நேற்று அதிகரித்துள்ளது. நீர்வரத்து பாதுகாப்பான அளவில் இல்லாததாலும், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாலும், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு பக்தர்கள் யாரும் இல்லை. கோவில் நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
