பெட்டி பெட்டியாக கெட்டுப்போன பேரீச்சம்பழம்.. Flipkart புதிய விளக்கம்
கோவை: கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் குடோனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து பிளிப்கார்ட் நிறுவனம் புதிய விளக்கம் அளித்துள்ளது.
பிளிப்கார்ட், அமேசான், மீஷோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மூலமாக பொருள்கள் வாங்கும் போக்கு பொதுமக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, பணிச்சூழல் என பம்பரமாக ஒவ்வொருவரும் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையிலும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றால் ஒரு நாளே முடிந்துவிடும் என்பதால் பெரும்பாலானோர் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர்.

ஆன்லைன் ஷாப்பிங்
இதன் மூலம் அமர்ந்த இடத்திலேயே இருந்து தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், எலக்ட்ரிக் சாமான்கள், போன், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் என அனைத்துப் பொருள்களையும் நொடிப் பொழுதில் ஆர்டர் செய்துவிடலாம். நேரம், பெட்ரோல் என அனைத்தும் மிச்சம். ஒருபக்கம் இது வரப்பிரசாதமாக இருந்தாலும், மறுபக்கம் போலியான பொருள்களை அனுப்புவது, கெட்டுப்போன தரமற்ற பொருள்களை அனுப்புவது என ஆன்லைன் நிறுவனங்கள் சர்ச்சைகளில் சிக்குவதும் வாடிக்கையாகவே உள்ளது.
கோவையில் ஷாக்
அந்த வகையில், கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் இ-காமர்ஸ் நிறுவன குடோன்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிளிப்கார்ட்
கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் flipkart நிறுவனத்துக்குச் சொந்தமான இ-காமர்ஸ் கிடங்கு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் அனைத்தும் இந்த குடோனுக்கு கொண்டு வரப்பட்டு இங்கிருந்து கோவை மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் சோதனை
கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 37 இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர். ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள பிளிப்கார்ட் கிடங்கிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த கிடங்கில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருள்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா, தரமற்ற பொருள்கள் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
காலாவதியான பேரீச்சம்பழம்
அப்போது, அந்த கிடங்கில் காலாவதியான 278 கிலோ பேரிச்சம் பழங்கள் வைத்திருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டு இருந்த பேரீச்சம் பழங்களைப் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவற்றை மொத்தமாக அழித்தனர். மொத்தம் 278 கிலோ எடையிலான பேரீச்சம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் அழித்தனர்.
பிளிப்கார்ட் விளக்கம்
இந்நிலையில், காலாவதியான பேரிட்சம் பழங்கள் அப்புறபடுத்துவதற்காக தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த்தாகவும், அவை விற்பனைக்கு உட்படுத்தப்படவில்லை என பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், Flipcart நிறுவனக் கிடங்குகளில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள எங்கள் மையங்களில் நடத்தப்படும் வழக்கமான உணவு பாதுகாப்பு தணிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்கிறோம். காலாவதியான பொருட்களை வழக்கமான தரச் சோதனை செய்து அதை தனியாக அடையாளம் காணப்பட்டு, அதை அகற்றுவதற்காக தனியாக பிரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அந்தப் பொருள்கள் விற்பனைக்கு உட்படுத்தப்படவில்லை. தரமான பொருட்கள் வாடிக்கையாளர்களை சென்றடைவதை flipcart நிறுவனம் உறுதி செய்கிறது. வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பொருள் தரம் முதன்மையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications