கனமழை காரணமாக கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
கோவை: கோவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிக்க இன்று முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம், கோவை மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலம். போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருவியில் குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தங்கள் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோவை குற்றாலத்தில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும். வனத்துறையினர் இதை கவனித்து, நீர்வரத்து அதிகமாக இருந்தால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிப்பார்கள். தென்மேற்கு பருவமழை காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை குறைந்து நீர்வரத்து குறைந்ததால், வனத் துறை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது. கடந்த ஜூலை 11 முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளிக்க இன்று (23.07.2025) முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications