Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனைமலை காட்டுக்குள்.. பயங்கர ஆயுதத்துடன் பதுங்கிய சந்தனமர மாஃபியா.. மடக்கி பிடித்த வனத்துறை

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் முக்கியமான உயிர் கோளமாகும். ஏராளமான வனவிலங்குகளும், உயர் ரக மரங்களும் உள்ளன. அங்கு சட்டவிரோத கும்பல் ஒன்று காட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி சந்தனமரம் கடத்த முயற்சித்துள்ளனர். வனத்துறை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மேகமலை புலிகள் காப்பகம் என்று ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் முக்கியமானதாக உள்ளது. கோவை, திருப்பூர் என்று இரண்டு மாவட்டங்களுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

Anamalai Sandle wood

நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி, திருப்பூர் என்று இரண்டாக பிரித்துள்ளனர். அங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. மேலும் தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் உள்ளன.

காடுகளில் அத்துமீறி வனவிலங்குகளை வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத சம்பவங்களும் அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு கும்பலை வனத்துறை கையும், களவுமாக பிடித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட கோட்டூர் பிரிவு, வில்லோனி காவல் சுற்று,
கடுக்காய்மரத்திட்டு சரகப் பகுதியில் நேற்று மாலை வனத்துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வனப்பகுதிக்குள் சுற்றித் திரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து வனக்களப்பணியாளர்கள் அவர்களின் அருகே சென்றுள்ளனர். களப்பணியாளர்களைக் கண்டதும் அந்த மர்ம ஆசாமிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். உடனடியாக வனக்களப்பணியாளர்கள் அவர்களை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கணேசன், அசோக் என்று தெரியவந்தது.

அவர்கள் வனத்துறையை கண்டதும் கையில் இருந்த நீலநிற போர்வையை தூக்கி வீசி தப்பிக்க முயற்சித்தனர். அவர்களால் எறியப்பட்ட நீல நிற போர்வையினை சோதனையிட்ட போது, அதில் 3 சந்தன மரத்துண்டுகளும், வெட்டுக்கத்தி ஒன்று இருப்பதும் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்ரமணியம்,துணை இயக்குநர் (பொள்ளாச்சி) பார்கவதேஜா ஆலோசனைப்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அந்த மூன்று பேரும் சந்தன மரங்களை திருட்டுத்தனமாக வெட்டி அதனை விற்பனை செய்வதற்காக காட்டுக்குள் பதுங்கியது தெரியவந்துள்ளது.

அங்கிருந்த சந்தன மரங்களை வெட்டி துண்டுகளாக்கி சுத்தம் செய்து நீல நிற போர்வையில் வைத்து மறைத்து தலைச்சுமையாக எடுத்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து சுமார் 22 கிலோ எடையுள்ள 3 சந்தன மர துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அவர்கள் மீது சந்தன மர வனக் குற்றம் 2/2024 வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பொள்ளாச்சி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+