'முதல்ல எல்லா பூத்லயும் ஆள் போட்டுட்டு போட்டிக்கு வாங்க'.. பாஜகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி
கோவை: பாரதிய ஜனதா கட்சி கணக்கிலேயே இல்லை.. அவங்களை பற்றி கவலையும் இல்லை.. அவர்கள் போட்டிக்கே வர முடியாது.. அவர்கள் எப்படி போட்டிக்கு வர முடியும்? வாட்ஸ் அப்பில், ட்விட்டரில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தால், போட்டிக்கு வந்துவிட முடியுமா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
நமது நாட்டின் 17வது லோக்சபாவின் பதவிக் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 18-வது லோக்சபாவிற்கு எம்பிக்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ம் தேதி அறிவித்தது. மொத்தம் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற போகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி, 2-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26-ம் தேதி, 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதி, 4-ம் கட்ட தேர்தல் மே 13-ம் தேதி, 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதி, 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதி, 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைப் பொறுத்தவரை முதல் கட்ட தேர்தலில் ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற போகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு 27-ந் தேதியான இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். 28-ந் தேதி (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு 30-ந் தேதி ( வரும் சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். அதன்பிறகு ஏப்ரல் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலியாக உள்ள விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை பொறுத்தவரை அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் என நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்த முறை பாஜக 2014 பாணியில், அதிமுக, திமுக இல்லாமல் தனியாக ஒரு பெரிய கூட்டணி அமைத்து களம் இறங்கி உள்ளது. பாஜக கூட்டணியில் அமமுக, பாமக, ஓ பன்னீர்செல்வம் அணி ஆகியவை உள்ளன. இதுதவிர ஜான் பாண்டியனின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் ஐஜேகே போன்றவையும் உள்ளன. இதேபோல் சரத்குமார் பாஜகவிலேயே இணைந்துவிட்டார். பாஜக இந்த முறை ஏராளமான நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்குகிறது.
பாஜக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 4 தொகுதிகளில் வென்ற நிலையில், இந்த முறை எப்படியாவது அதிமுகவிற்கு நிகராக வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் களம் இறங்கி உள்ளார். கோவை தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. இங்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று பக்கமும் வலுவான போட்டி உள்ளது.
கோவையில் கடந்த முறை அதிமுக கூட்டணி 10 தொகுதிகளிலும் வெல்வதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வியூகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.இந்த சூழலில் அவருக்கு மிகவும் நெருக்கமான சிங்கை ராமச்சந்திரனை எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக களம் இறக்கி உள்ளார். எஸ்பி வேலுமணி, தானே களம் இறங்கியது போல, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தீவிரமான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இதேபோல் நேற்று பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எஸ்பி வேலுமணி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும் போது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக மீது தமிழக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களிடம் நேரடியாக சென்று வாக்கு கேட்கும் தகுதி, திமுக-விற்கு கிடையாது. மக்களுக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைக் கொடுத்தது அஇஅதிமுக. இந்த தேர்தலில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.
முன்னதாக பாஜக குறித்து பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி கணக்கிலேயே இல்லை.. அவங்களை பற்றி கவலையும் இல்லை.. அவர்கள் போட்டிக்கே வர முடியாது.. அவர்கள் எப்படி போட்டிக்கு வர முடியும்? வாட்ஸ் அப்பில், ட்விட்டரில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தால், போட்டிக்கு வந்துவிட முடியுமா? அவர்கள் ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு வாங்குவாங்க? நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன்.. முதலில் பூத்திற்கான ஆட்களை போடுங்கள் பார்ப்போம்" இவ்வாறு எஸ்பி வேலுமணி பாஜகவை கடுமையாக சாடினார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications