அதிமுகவிற்கு கடைசி தேர்தல்.. கோவையில் ஒரு தொகுதியில் கூட வெல்லக்கூடாது.. செந்தில் பாலாஜி சபதம்
கோவை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் கோவையில் சிவானந்தாகாலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கரூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்றும் நாம் காட்ட வேண்டும் என்றும், கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் கூறினார்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அந்த வகையில் SIR செயலை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கம்யூனிஸ்ட், ஆதிஇந்திய தேசிய லீக், இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் அமைப்புகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் SIRயை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, "SIR குறித்து முதலில் எதிர்ப்பை பதிவு செய்தவர் நம் முதல்வர் ஸ்டாலின் தான். IT, ED போன்றவற்றை கொண்டு வந்து அடக்கு முறையை முன்னெடுத்தார்கள். ஆனால் தோல்வியை தழுவியதால் தற்போது இந்த SIR மூலம் அடக்கு முறையை முன்னெடுக்கிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் ஏன் அவசரமாக இதனை முன்னெடுத்தார்கள். இதற்கு இந்த காலம் போதாது என்று தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும்.. அப்படி இருந்தும் அதனை செய்கிறார்கள்.. பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதனை தமிழகத்தில் செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் . அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று கூறும் ஒன்றிய அரசு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க எதிர்க்கிறது. பல்வேறு திட்டங்களை அளித்த திமுக அரசு, மீண்டும் வென்று விட கூடாது என நினைத்து இவற்றையெல்லாம் செய்கிறது.
அதிமுகவில் கண்னை மூடி கொண்டு எடப்பாடி பழனிசாமி SIR யை ஆதரிக்கிறார், அதிமுகவிற்கு இது தான் இறுதி தேர்தல் என்பதை நாம் செய்து காட்ட வேண்டும். தேர்தல் ஆணையத்தை பாஜக கையில் வைத்துள்ளது. 2026ல் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விட கூடாது. கோவையில் அவினாசி மேம்பாலத்தை திறந்து வைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்னும் பெரியார் நூலகம், செம்மொழி பூங்கா என பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறார். கோவையில் வரலாறு காண வளர்ச்சியை இங்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமலேயே முதல்வர் கொண்டு வந்துள்ளார். எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து SIR முறியடிப்போம்" இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications