"ஹெச்.ராஜா சொன்னது போல.. ஸ்டாலின் is more danger than கருணாநிதி என்பதே கரெக்ட்!" சொல்கிறார் ஆ.ராசா
கோவை: நூல் அறிமுக விழா ஒன்றில் முதல்வருக்கு வழங்கப்படும் பட்டங்களில் சிறந்து பட்டம் எது என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா பாராட்டியுள்ளார்.
பெரியார் குறித்து இதுவரை பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் திருமாவேலன் "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இதில் தமிழர்களுக்கும் தமிழ் சமூகத்திற்கும் பெரியார் ஆற்றிய சேவைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பெரியார் தமிழர் இல்லை என்ற விமர்சனத்திற்குப் பதிலடியாக இப்புத்தகம் அமைந்துள்ளது.

நூல் அறிமுக கூட்டம்
சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தின் நூல் அறிமுக கூட்டம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்றைய தினம் "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தகத்தின் நூல் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

பெரியார் பேரன்
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ், புலவர் செந்தலை கவுதமன், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா தலைமையில் இந்த நூல் அறிமுக விழா கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய சத்யராஜ், பெரியாரின் பேரன் என்பதற்குச் சிறந்த உதாரணம் ஆ.ராசா என்றார்.

உலக மொழிகளில் பெரியார்
மேலும், பெரியாரின் புத்தங்களை உலக மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும் என்றும் திராவிட மாடல் எனக் கூறுவதற்குப் பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதேபோல இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ ராசா பெரியார் பற்றிய "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்" புத்தகம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டாலின்
முதல்வர் குறித்தும் ஆ ராசா பாராட்டிப் பேசினார். முதலமைச்சருக்கு எத்தனையோ பட்டங்கள் வரலாம் என்று தெரிவித்த ஆ ராசா, ஆனால் ஹெச்.ராஜா சொன்ன "Stalin is more danger than kalaingar" என்ற பட்டம்தான் பொருத்தமானதாகும் என்றார்.
-
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications