கோவையை மொத்தமாக கலர் மாற்றும்.. 3 பெரிய ப்ராஜெக்ட்.. அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்.. சிலிர்க்குதே
கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட உள்ள பின்வரும் 3 திட்டங்கள் கோவைக்கு புதிய கலர் கொடுத்து மொத்தமாக அந்த நகரத்தை முன்னேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்:8, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
ஸ்டாலின் உத்தரவு: அதோடு இல்லாமல் கோவை டைடல் பார்க் பகுதிகளை அழகுபடுத்தும் வேலைகள் தொடங்கி உள்ளன. நியுயார்க் ஐடி பார்க் ஸ்டைலில் இங்கே இருக்கும் சாலைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. சாலைக்கு நடுவே பூங்கா அமைக்கவும், சாலை ஓரங்களை அழகு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்களும், அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டவுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மீட்டிங்: சாலை பணிகள் தொடர்பான மீட்டிங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 21.09.2023 அன்று சென்னை, மாநகரில் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று, கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 8, துளசி நகர் சாலைப் பணி மாநகராட்சி வார்டு எண்:8, துளசி நகரில் 2023-24-ஆம் ஆண்டிற்கான மாநில நிதி குழு நிதியின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகள் கடந்த 05.09.2023 அன்று தொடங்கப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 5, நஞ்சப்பா நகர் சாலைப் பணி அதனைத் தொடர்ந்து, மாநில நிதி குழு நிதியின் கீழ் வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வி.கே.வி. நகரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்ததோடு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கியதற்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
செம்மொழி பூங்கா: கோவையில் அமைய உள்ள பிரம்மாண்ட செம்மொழி பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழா சமீபத்தில் நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இது சென்னை அண்ணா சாலையில், ஜெமினி பாலம் கீழே அமைந்து இருக்கிறது. இதற்கு தினமும் நூற்றுக்கணக்கில் மக்களும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு.

இந்த பூங்கா கடந்த 2010ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது தமிழக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த பூங்கா, அந்த பகுதியில் இருந்த தனியார் ஹோட்டலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாகும். அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி, இந்த பூங்கைவை அமைத்தது. சிறைச்சாலை மைதானத்தில் முதற்கட்டமாக செம்மொழிப் பூங்காவுக்கான பணிகள் இந்த மாதம் தொடங்கும் என கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் தெரிவித்துள்ளார். பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள 165 ஏக்கர் சிறை மைதானத்தில் பூங்கா கட்டம் வாரியாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கோவை மத்திய சிறைச்சாலையில் பயன்படுத்தப்படாத 45 ஏக்கர் நிலம் பகுதியில் இந்த பூங்கா அமைய உள்ளது. 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கடந்த ஜூன் 28ம் தேதி பூங்காவுக்கான டெண்டர் திறக்கப்பட்டு பல்வேறு பணிகளுக்கு ஏலம் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ: கோவையில் அமைய உள்ள மெட்ரோவிற்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. கோவையில் மெட்ரோ பணிகள் இந்த வருடமே தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும்.
அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை. சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை. மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளனர், மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னையில் இருப்பது போலவே அதே வேகத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 3 கட்டங்களாக கொண்டு வரப்பட உள்ளது. சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை முதல் கட்ட பணியின் இறுதியில் மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கோவையில் மெட்ரோ லைட் திட்டத்திற்கு பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மெட்ரோ லைட் என்றால் மெதுவாக செல்லும், குறைந்த பெட்டிகள் இருக்கும். ஆனால் கோவை மெட்ரோ சென்னை மெட்ரோ போலவே முழு மெட்ரோவாக செயல்படும்.
முதலில் கோவையில் மெட்ரோ லைட் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எடுத்த ஆலோசனையின் முடிவில் இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொழில்நகரமான கோவை நகரின் வளர்ச்சியையும், முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு மெட்ரோ லைட் திட்டத்திற்குப் பதிலாக வழக்கமான மெட்ரோ ரயில் திட்டமே செயல்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications