ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீட்டிப்பு.. தவெக ஆட்சியில் கோவைக்கு கிடைத்த முதல் குட்நியூஸ்
கோவை: கோவை மாவட்டம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சிரமத்தை ஏற்படுத்த வருகிறது. அவிநாசி சாலையில் 10 கி.மீ தொலைவுக்கு ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டம் காத்திருப்பில் இருந்தது. இந்நிலையில் மேம்பாலத்தை நீட்டுவதற்கு இருந்த தடை விலகியுள்ளது. தவெக ஆட்சியமைந்தவுடன் ஜி.டி நாயுடு மேம்பாலம் நீட்டிப்பில் நல்ல செய்தி கிடைத்துள்ளது.
இந்தியாவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் கோவை முதன்மையான நகரமாக உள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரும் மாவட்டமாக கோவை உள்ளது. கோவை மாநகரின் மக்கள் தொகை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. புறநகர் பகுதியும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

கோவை மேம்பாலங்கள்
கல்வி, தொழில்துறை, மருத்துவம், ஐ.டி, தங்கநகை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. ஆனால் கோவையின் உள்கட்டமைப்பு பெரியவு மேம்படுத்தப்படவில்லை. விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
மக்கள் தொகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை அதிகரித்து கொண்டிருக்கிறது. அனைத்து பிரதான சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை, திருச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
ஜி. நாயுடு மேம்பாலம் நீட்டிப்பு
அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலமான இது கடந்த வருடம் முதல் செயல்பாட்டிற்கு வந்தது. கோவையின் இதயப் பகுதியில் அவிநாசி சாலை உள்ளது. அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், விமான நிலையம் செயல்பட்டு வருகின்றன.
ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை முழுமையாக சரியாகவில்லை. கோல்டுவின்ஸ் பகுதி முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கிமீ தொலைவுக்கு அந்த மேம்பாலம் நீட்டிக்கப்படும் என்று திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. மேம்பாலத்திற்கான மண் பரிசோதனை, திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்றன.
வெளியான குட்நியூஸ்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதனால் மேம்பாலம் கட்டப்படுவதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்டும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தடையின்மை சான்றிதழ் வழங்காததால் திட்டம் காத்திருப்பில் இருந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மேம்பாலத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து தடையின்மை சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இதனால் மேம்பாலத்திற்கு ஏற்பட மெட்ரோ ரயில் திட்டத்தை வடிமைத்து கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். விரைவில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்.
விரைவில்
தற்போதுள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்திற்கு 300 மீ இடைவெளிவிட்டு இந்த மேம்பாலம் கட்டப்படும். போக்குவரத்தை பொறுத்து ஏறு மற்றும் இறங்கு தளம் அமைக்கப்படும். கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ தொலைவுக்கு கட்டப்படும் இந்த மேம்பாலத்திற்கு ரூ.700 - 8000 கோடி செலவாகும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications