கோவையில் அவினாசி சாலை மேம்பாலத்தால் பைபாஸுக்கு குட் பாய்.. டோல்கேட் காசும் மிச்சம்.. பெரிய மாற்றம்
கோவை: தமிழ்நாட்டிலேயே மிக கடுமையான நெரிசல் உள்ள சென்னை ஜிஎஸ்டி சாலையில் கூட இல்லாத மிகப்பெரிய மேம்பாலம், கோவைக்கு தொலைக்கு பார்வையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சென்னை அண்ணா சாலை போல், கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் காரணமாக புறநகரில், குறிப்பாக பைப்பாஸில் சென்ற வாகனங்கள் இனி ஊருக்குள் வந்து ஏறி செல்லவும் வாய்ப்பு உள்ளது. டோல்கேட்டைத் தவிர்க்க அவினாசி மேம்பாலத்தை நோக்கி வாகனங்கள் வருவது இனி அதிகமாகும்.
கோவையில் அவினாசி சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம், அந்த சாலையில் நிலவி வந்த நெரிசலைக் குறைப்பது. ஆனால், L&T பைபாஸில் விதிக்கப்படும் கட்டணம் காரணமாக, வெளியூர் செல்லும் இலகு ரக வாகனங்கள் புறநகர்ப் பாதையை விடுத்து நகரத்திற்குள் நுழைந்து, கட்டணமில்லா இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்த அதிக ஆர்வம் காட்ட வாய்ப்பு உள்ளது.. இதன் காரணமாக, போக்குவரத்து பைபாஸ் சாலையிலிருந்து விலகி, மேம்பாலத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் முக்கியப் பகுதிகளில் புதிய நெரிசலை உருவாக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி இருக்கிறது.ஏன் இந்த கேள்வி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கேரளாவின் நுழைவு வாயில்
கோவையை பொறுத்தவரை கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக உள்ள ஒரே மலைப்பாதை அல்ல நுழைவு வாயில். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்,பெரும்பாலான கேரள மக்கள் கோவையை தாண்டித்தான் போக முடியும். எனவே கோவை மாநகரம் கேரளாவின் நுழைவு வாயில் ஆக இருக்கிறது. கேரளாவின் கோட்டயம். கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கோவை நோக்கி வரும் வாகனங்கள் எல் அண்ட் டி பைபாஸ் வழியாகவே சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலை டோல்கேட்கள் உள்ள சாலையாகும்... கட்டணம் செலுத்தி தான் போக முடியும். அப்படித்தான் சென்று வருகின்றன.
நகருக்குள் வருவார்கள்
ஆனால் கோவையில் அவினாசி சாலையில் சுமார் 10.1 கி.மீ நீளமுள்ள மேம்பாலம் முற்றிலும் கட்டணம் இல்லாத சாலையாகும். இதனால், டோல்கேட்டில் பணம் செலவழிப்பதைத் தவிர்க்க விரும்பும் அனைத்து வாகன ஓட்டிகளும் நகரத்திற்குள் இருக்கும் அவினாசி சாலையைப் பயன்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் பைபாஸ் சாலைக்குச் சென்று டோல்கேட்டைக் கடப்பதைவிட, நீலாம்பூர் மேம்பாலத்தில் ஏறி, நேரடியாக விமான நிலையம், பீளமேடு, நவ இந்தியா, லட்சுமி மில்ஸ் போன்ற முக்கியப் பகுதிகளைச் சீக்கிரமாகக் கடந்து சென்றுவிட முடியும்.
மக்கள் எளிதாக போய் வர முடியும்
ஜிடி நாயுடு பெயரில் அமைந்துள்ள இந்த புதிய மேம்பாலம் வழியாக சென்னை, பெங்களூர். சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு எளிதாக போக முடியும். இந்த பாலத்தால் கோவை மாநகரில் அவினாசி சாலை மேம்பாலதிற்கு கீழ் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது. விமான நிலையத்திற்கு மிக எளிதாக போய் விட முடியும். அதேபோல் எளிதாக நகர மக்கள் போய் வர முடியும். இதன் காரணமாக அங்கு தொழில் வளம் பெருகும். குறைந்த நேரத்தில் நகரத்தை விட வெளியே போக முடியும்.
டோல்கேட் கட்டணம் இல்லை
ஆனால் டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலையின் பயன்பாடு குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பைபாஸில் செல்ல வேண்டிய வாகனங்கள் நகரின் மையப் பகுதிக்குள் வந்து செல்லும் வாய்ப்பு மிக அதிகம் ஆகும். எனவே இந்த மேம்பாலத்தின் நுழைவு/வெளியேறும் பகுதிகளில் நெரிசல் அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் இருந்து வாகனங்களும் சரி, கேரளாவை நோக்கி செல்லும் வாகனங்களும் சரி, இனி நகரத்திற்குள் வந்தே செல்ல வாய்ப்பு மிக அதிகம் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications