அப்படிப்போடு..பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட அரசு பஸ்கள் - கோவை ஆட்சியருக்கு பறந்த அதிரடி உத்தரவு
கோவை: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் சாதி பாகுபாடு பார்த்து அரசுப் பேருந்து 400 மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ளது அண்ணா நகர். இப்பகுதியில் பட்டியல் சாதி மக்கள் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கெம்பனூர் கிராமத்தில் கடைசி பேருந்து நிறுத்தமாக அண்ணா நகர் உள்ளது. கெம்பனூர் நிறுத்தத்துக்கும், அண்ணாநகருக்கும் இடைவெளி சுமார் 400 மீட்டர் தான்.

கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், 64 டி, S15 A/1C, S3 பி, 21, 21 பி ஆகிய 5 பேருந்துகள் காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்தன. கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு இந்த 5 பேருந்துகளையும் அண்ணா நகர் பகுதிக்கு இயக்கப்படாமல் உயர் சாதியினர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அண்ணா நகர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, 21 மற்றும் 21B பேருந்துகளைத் தவிர மற்ற 3 பேருந்துகள் அப்பகுதிக்கு இயக்கப்பட்டுள்ளன. ஆனால், அதுவும் காலை முதல் இரவு வரை முழுமையாக இயக்கப்படாமல் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பெண்கள், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அண்ணா நகரில் இருந்து கெம்பனூருக்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டியுள்ளதாக புகார் எழுந்தது.
கடைசி பேருந்து நிறுத்தமான அண்ணாநகரில் இருந்து பேருந்து புறப்படுவதால் பட்டியல் சாதி மக்கள் இருக்கைகளில் அமர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அமர்ந்திருக்கும்போது, நாங்கள் எப்படி நின்று கொண்டோ, அல்லது அவர்களுடன் சமமாகவோ அமர்ந்து செல்ல முடியும் என்று கூறி சிலர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், டிஎன்எஸ்டிசி அதிகாரிகள், கெம்பனூரில் இருக்கும் உயர்சாதி பிரிவினரின் பேச்சைக் கேட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டப்ப்டுகிறது.
இதனால், காந்திபுரம் பகுதியில் இருந்து இயக்கப்படும் 21 மற்றும் 21 பி போன்ற பேருந்துகள் கெம்பனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள அண்ணா நகருக்கு சாதிய பாகுபாடு பார்த்து இயக்கப்படாமல், 400 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தி வைக்கப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், கோவை மாவட்டம் கெம்பனூர் அருகே சாதிய அடிப்படையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாயத்தினர் வசிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லாமல் 500 மீட்டர் முன்னதாகவே நிறுத்தப்படுவது தொடர்பாக நாளிதழ் செய்தி அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி இதுகுறித்து விசாரித்து, சாதி ரீதியான பாகுபாடுகளை உடனடியாக விசாரித்து பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் பேருந்துகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட அறிக்கையினை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்குள் (24.9.25) தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்கவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications