கோவை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி.. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை
கோவை: கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி அமலி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ் (38). இவர் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்.
இதனால் அவர் மனைவி ஷோபா (30), மகன் ரித்திக் மைக்கேல் (7), மகள் ரியா ஏஞ்சலின் (1) மற்றும் தாய் புவனேஸ்வரி (65) ஆகியோருடன் அமலி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த 6 மாதங்களாக தங்கியிருந்தார்.

போலீஸாருக்கு
நேற்று மாலை அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கருமத்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிகிச்சை
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதில் தற்கொலை செய்து கொண்ட அந்தோணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் சரியாகவல்லை.

மதிய உணவில் விஷம்
இதனால் மனம் உளைச்சலில் இருந்த அந்தோணி, மனைவி, குழந்தைகள், தாய் ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மதிய உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

பரபரப்பு
முதுகுவலியால்தான் குடும்பத்தினரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக அந்தோணி எழுதிய தற்கொலை கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications