பைக்கில் மினுமினுத்த "ஜிபிஎஸ்".. கோவையில் இவங்களா? அந்த வீடியோவை பார்த்து திணறி நின்ற கோயம்புத்தூர்
கோவை: கோவை மளிகைக்கடைக்காரர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது.. கொள்ளை சம்பவத்தைவிட, கொள்ளை அடிக்க 2 திருடர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான், கோவையை கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.
கடந்த 2021-ல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.. அன்றைய தினம் காலையில், கஸ்டமர்கள் போல வங்கிக்கு வந்த கும்பல், நிதி நிறுவன மேலாளர், ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, 25 கிலோ தங்க நகைகளை தங்களது பைகளில் நிரப்பிக் கொண்டு தப்பியது.

கன்டெயினர்: இந்த கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போதுதான், கொள்ளையர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. எப்போதுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை எல்லாம், ஒரு பெட்டியில் போட்டு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ஒரு கன்டெயினரில் வைத்து விடுவார்களாம்... பாதுகாப்புக்காக இப்படி நகைகளை வைத்துவிடுவார்களாம்.
அப்படித்தான், சம்பவத்தன்றும் நகைகளை எல்லாம் பெட்டியில் போட்டு, கண்டெய்னர் லாரியில் ஜிபிஎஸ் உதவியுடன் தப்பியிருக்கிறது இந்த ஜிபிஎஸ் கருவிதான் போலீசாருக்கும் உதவியிருக்கிறது.
ஜிபிஎஸ் கருவி: அந்த கும்பல் எங்கெல்லாம் சென்றது என்பதை ஜிபிஎஸ் கருவி காட்டிக் கொடுக்கவே, போலீசாரும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என 3 மாநில போலீசாரின் உதவியுடன் 7 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்தனர். 11 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கோவையிலும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. கோவை பூ மார்க்கெட் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார் 43 வயதுடைய குமார்.. இவரது மனைவி பெயர் சங்கீதா (40)..
இந்த தம்பதி இருவருமே ஆர்.எஸ்.புரத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள்.. கடந்த அக்டோபர் 21ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றிருக்கிறார்கள்.. அன்று மதியம், வீட்டின் ஹவுஸ் ஓனர் செல்வராஜ், குமாருக்கு போன் செய்து, வீட்டு கதவு திறந்திருப்பதாக சொன்னார்.
தாலி செயின்: இதைக்கேட்டு பதறிப்போன குமார், உடனடியாக வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டில், தாலி செயின், காசு மாலை, ஆரம், வளையல் என கிட்டத்தட்ட 50 சவரன் நகைகள், 14,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ந்தார்.
இதனால் குமார் போலீசில் புகார் தந்ததையடுத்து, சம்பவ பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பைக்கில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து, குமார் வீட்டின் பூட்டை உடைப்பதும், கொள்ளையடித்துவிட்டு கிளம்பி வெளியே வரும்போது, ஹவுஸ் ஓனர் செல்வராஜை பார்த்ததுமே, அங்கிருந்து இருவரும் பைக்கில் தப்பிச்சென்றதும் பதிவாகியிருந்தது.
சிசிடிவி: இதையடுத்து, பல்வேறு சிசிடிவி பதிவுகளை கொண்டு, சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை போலீசார் தேடினார்கள்.. இறுதியில், ஆர்.எஸ்.புரத்தில் இருந்து பாலக்காடு நோக்கி அதே பைக்கில் 2 பேர் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று, பாலக்காடு பள்ளி வீதியை சேர்ந்த ஜாகீர் உசேன், 49, மோனீஸ், 24, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 50 சவரன் நகைகளையும் மீட்டு விசாரணை நடத்தினர்.
அதாவது, குமாரின் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க, ஜாகீர் உசேன் அடிக்கடி செல்வாராம்.. அப்போதுதான், அவரது வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிறார்.. குமாரின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ளும் வகையில், குமாரின் பைக்கில் "மேக்னட்டிக் ஜிபிஎஸ் கருவியை பொருத்திவிட்டாராம் ஜாகீர் உசேன்.
ஜிபிஎஸ் மேப்: இதன்மூலம் குமார் எப்போது வீட்டில் இருந்து கிளம்புகிறார்? எங்கெல்லாம் செல்கிறார்? என்பதை ஒரு வாரம் கண்காணித்து வந்திருக்கிறார்.. சம்பவத்தன்றும் குமார் வீட்டில் இல்லாததை ஜிபிஎஸ் மூலம் உறுதி செய்த ஜாகீர் உசேன், அவரது நண்பர் மோனீஸ் என்பவரை அழைத்து வந்து கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
வழக்கமாக, கொள்ளையர்களை பிடிக்க ஜிபிஎஸ் கருவிகள் உதவி கொண்டிருக்க, ஜிபிஎஸ் கருவியை வைத்தே கொள்ளை சம்பவம் நடந்துள்ளது, கோவையில் பெரும் அதிர்வலையை தந்து வருகிறது.
இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு கைதாகியிருக்கும் ஜாகீர் உசேன், பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை தெரிந்து கொண்டு, அவர்களிடம் பணம் பறிப்பாராம்.. அதாவது, தன்னை ஸ்பெஷல் பிராஞ்ச் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டவராம். இது தொடர்பாகவும், அவர் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications