பிறப்புறுப்பை அறுத்து பேரன் கொலை.. பாத்ரூமில் கிடந்த பேத்தி.. எகிறி தப்பிய பாட்டி.. நடுங்கி போன கோவை
3 மாத பேரக்குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் தேடி வருகிறார்கள்
கோவை: 3 மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு, தப்பி ஓடிய பாட்டியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன்.. இவர் ஒரு என்ஜினியர்.. மனைவி பெயர் ஐஸ்வர்யா.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது... ஆண் குழந்தைக்கு ஆரியன் என்றும் பெண் குழந்தைக்கு ஆரிகா ஸ்ரீ என்றும் பெயர் சூட்டியிருந்தனர்.

பராமரிப்பு
இந்த குழந்தைகளை கூடவே இருந்து கவனித்து கொள்வதற்காக, ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி மதுரையில் இருந்து வந்திருக்கிறார்.. கடந்த 2 மாதங்களாகவே இவர்களுடன்தான் தங்கி, குழந்தைகளையும் பராமரித்து வந்துள்ளார்.. இந்நிலையில் நேற்றிரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம், ஐஸ்வர்யாவும் அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்புக்கு சென்று மருந்து வாங்கி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்..

பிறப்புறுப்பு
அப்போது சாந்தி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.. என்ன நடந்தது என்று ஐஸ்வர்யா கேட்கவும், "வீட்டில் இருந்த குழந்தையை யாரோ வந்து எடுத்துட்டு போய்ட்டாங்க" என்று சொன்னார்.. இதை கேட்டு பதறி போன ஐஸ்வர்யா, வீட்டுக்குள் குழந்தைகளை தேடினார். அப்போது ஆண் குழந்தை ஆரியன் படுக்கையில் பிறப்புறுப்பில் காயங்களுடன் சடலமாக கிடந்தான். பெண் குழந்தை ஆரிகாஸ்ரீ பாத்ரூமில் ஓரமாக படுக்க மயங்கி கிடந்தாள்.. குழந்தையின் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. அழுக்கு துணியால் உடம்பு முழுவதும் மூடப்பட்டிருந்தது.

அதிர்ச்சி
ஆண் குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்களையும், பெண் குழந்தை மயங்கிய நிலைமையிலும் இருப்பதை கண்டு ஐஸ்வர்யா கதறி அழ ஆரம்பித்தார்.. அதற்குள் பாட்டி சாந்தி வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.. இது குறித்து ஐஸ்வர்யா கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தந்து வரவழைத்தார்.. பிறகு உடனடியாக துடியலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.

சிகிச்சை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்... இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய பாட்டி முயற்சித்துள்ளது தெரியவந்தது.

பாதிப்பு
அதுமட்டுமல்ல, சாந்தி பாட்டிக்கு 15 வருடங்களாகவே மனரீதியான பாதிப்பு இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. இப்போது சாந்தி பாட்டி எங்கே என்று தெரியவில்லை.. போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. இதில் இன்னொரு ஷாக் தகவலும் தெரியவந்துள்ளது.. மனநிலை பாதிக்கப்பட்ட சாந்தியின் கணவர் மதுரை மதிச்சியம் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவராம்.












Click it and Unblock the Notifications