கோவை முதியவர் செய்த காரியம்.. நொடியில் பறிபோன ரூ.16 லட்சம்.. மொபைல் ஃபோனை ஹேக் செய்த குஜராத் கும்பல்
கோவை: கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முதியவரின் மொபைல் ஃபோனை ஹேக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாயை மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த 10 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சைபர் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கார்டு மேலே 16 நம்பர், வங்கியில் இருந்து அழைக்கிறோம், கேஒய்சி அப்டேட் என பல வழிகளில் மோசடி கும்பலினர் வலை விரிக்கின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்குவோர் பல லட்சங்களை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலமாக ரூ. 52,976 கோடியை இழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.19,812 கோடியை இந்தியர்கள் இழந்தனர். கடந்த ஆண்டில் மகாராஷ்டிராவில் சைபர் மோசடி புகார்கள் அதிகளவில் பதிவாயின. அங்கு ரூ.3,203 கோடியை மக்கள் இழந்துள்ளனர். அடுத்ததாக கர்நாடகா 2,413 கோடி ரூபாயையும், தமிழகத்தில் 1,897 கோடி ரூபாயையும் மக்கள் ஆன்லைன் மோசடிகளால் இழந்துள்ளனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முதியவரின் மொபைல் ஃபோனை ஹேக் செய்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்ச ரூபாயை மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த 10 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திரசேகர் (71). இவரது செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு RTO அலுவலகத்தின் பெயரில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அந்த இணைப்பை திறந்து பார்த்த நிலையில் முதியவரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நாள் முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து 16 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த முதியவர் வங்கிக்குச் சென்று பார்த்தபோது, கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பணத்தை இழந்த முதியவர் சாமுவேல் சந்திரபோஸ் கோவை மாநகர சைபர் கிரைம் போலிசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, உடனடியாக தனிப்படை போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட்டனர். விசாரணையில் குஜராத் மாநிலத்தில் பதுங்கி இருந்த கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குஜராத் மாநிலம் சூரத் சென்ற தனிப்படையினர் மோசடி கும்பலைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
சூரத் பகுதியைச் சேர்ந்த பத்லியா ரஜினி பாய் தல்ஷிபாய், விஸ்வபாய் ஹிமத்பாய் ரடாடியா, ரடாடியா சவன், கோஹில் விஜய் தயாள் பாய், ரத்தூர் ஜிதேந்திர சிங் சர்வன் சிங், கிராசே மகேந்திர சிங் தாகே சிங், சோவாடியா மிரல் மனோஜ் பாய், கபில் ராஜு பாய் கோத்ரே, சோ வாடியா மீட் மனோஜ் பாய் ,
பால் சந்தன் ஜெயநாத் ஆகிய 10 பேரை கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
இவர்களிடம் இருந்து 3.50 லட்சம் ரூபாய் பணம், 311 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஸ்வைப்பிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவர்களின் வங்கி கணக்கில் இருந்த 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் பணம் முடக்கி வைக்கப்பட்டதுடன் விசாரணை நடைபெற்று வருகின்றது. கோவை போலீசார் குஜராத் சென்று அவர்களை கைது செய்து வந்துள்ள நிலையில், அவர்கள் இதேபோல வேறு யாரையும் மோசடி செய்திருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications