ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க ஹைடெக் கேமரா! தமிழக அரசு முன்னெடுக்கும் புது முயற்சி!
கோவை: ரயில் மோதி யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள தமிழக அரசு, அதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் கோவை - வாளையாறு இடையேயான ரயில் தண்டவாளத்தில் யானை உயிரிழப்பு தொடர் கதையாக உள்ளது. ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக தமிழக வனத்துறை தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் யானை மீது ரயில் மோதுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா தண்டவாளங்களில் பொருத்தப்பட்டள்ளது.

யானைகள் தண்டவாளம் அருகே சென்றாலோ, தண்டவாளத்தில் உலவிக் கொண்டிருந்தாலோ செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை மூலம் ரயில் ஓட்டுநருக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டமாகவே, தனியாகவோ தண்டவாளப் பகுதிகளில் சுற்றித் திரியும் யானைகளை விரட்டும் அதிநவீன ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மதுக்கரையில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு கலந்துகொண்டார்.
தென்னக ரயில்வேக்கு உட்பட்ட ரயில் வழித்தடங்களில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 45 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எட்டிமடை வாளையாறு இடையே ஓராண்டுக்கு முன்னர் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் இனியும் இது போன்ற துயர நிகழ்வு தொடரக்கூடாது என்பதற்காக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வன உயிரின ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோவை -வாளையாறு இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில் இப்போது நிறைவேறியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications