கோவைக்கு வந்த காஸ்ட்லி ட்ரோன்கள்.. மதிப்பு 1.15 கோடி.. சுங்கத்துறையிடம் சிக்கிய முக்கிய ஆதாரம்
கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை சுங்க இலாக்கா அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். அப்படித்தான் சிங்கப்பூர் மற்றும் துபாயில் இருந்து கோவை வந்து விமானங்களில் பயணிகளிடம் சோதனை நடத்தினார்கள். இதில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.15 கோடி மதிப்பிலான உயர் ரக ட்ரோன்கள் இருந்தது. அவற்றை சுங்க வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டுகிறது. தொழில் நகரமான கோவைக்கு பணி நிமித்தம் காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

இதில், அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு ஒரு சில இடங்களில் இருந்து நேரடியாக விமான சேவை இல்லாததால், கேரளாவைச் சேர்ந்த பயணிகள் கோவை விமான நிலையம் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. அதே போல், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் கோவை வழியாக மீண்டும் நாடு திரும்புவதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம், அரிய வகை விலங்குகள், பறவைகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால், கோவை விமானநிலைய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு போலீசார் விமான நிலையத்தில் சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது நடந்த சோதனையில் பயணிகள் இருவரிடம் இருந்து (DJI Air 3S, Mini 4 Pro, Mavic 3 Pro, Avata 2, DJI Flip ) ரூபாய் 1.15 கோடி மதிப்புள்ளான உயர்ரக ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையைப் போல் சென்னை விமான நிலையத்திலும் அடிக்கடி பயணிகள் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி வந்து சிக்குகிறார்கள். கடந்த ஐந்து நாள் முன்பு தாய்லாந்தில் இருந்து வந்த விமானத்தில் ரூ. 1 கோடி மதிப்புடைய, 2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்தி வரப்பட்டது. அதனை கடத்தி வந்த வட மாநில பயணியை பிடித்து கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications