கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டம் கூட்டமாக வந்த.. வடஇந்திய பெண்கள்.. வானதிக்காக "திடீர்" பிரச்சாரம்.. இந்தியில் பகீர் கோஷம்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்காக பாஜக உறுப்பினர்கள் இந்தியில் பிரச்சாரம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    கோவை: வானதி அக்கா, ஜிந்தகி சொக்கா... வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவு திரட்டும் வட இந்திய பெண்கள்!

    தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இங்கு கடுமையான மும்முனை போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

    இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் கோவை தெற்கின் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் களமிறங்குகிறார். கடைசி நேரத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றிபெற்று, தேர்தலில் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு உள்ளது.

    பாஜக

    பாஜக

    இந்த நிலையில் வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கில் மிகப்பெரிய அளவில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்காக பாஜக நிர்வாகிகள் பலர் இங்கு களமிறக்கப்பட்டுள்ளனர். வேறு எங்கும் ஜெயிக்கவில்லை என்றாலும் கோவை தெற்கு தொகுதியில் வானதி வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    இதற்காக நேற்று கோவை தெற்கில் இருக்கும் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். கோவையில் வசிக்கும் வடஇந்திய பெண்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் வேற்று மாநில பெண்கள் பலர் வானதிக்கு ஆதரவாக இந்தியில் பிரச்சாரம் செய்தனர்.

    இந்தி

    இந்தி

    மோடி ஜிக்கு ஜெய்... வானதி அக்காவிற்கே வெற்றி.. வானதி அக்காவிற்கே வெற்றி என்று கோஷம் எழுப்பினார்கள். அதோடு அம்மாவின் (ஜெயலலிதா) ஆசிர்வாதம் பெற்ற வேட்பாளர் வானதி அக்காதான் என்று இந்தியில் முழுக்க முழுக்க கோஷம் எழுப்பினார்கள். 10-20 பெண்கள் இந்த பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர் .

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    அருகில் இருக்கும் பல வீடுகளுக்கு சென்று .. அங்கு இருக்கும் பொது மக்களிடம் கூட இந்தியிலேயே பிரச்சாரம் மேற்கொண்டனர். பொதுவாக தமிழகத்தில் இந்தியாவில் யாரும் வாக்கு சேகரிக்க மாட்டார்கள். தேசிய தலைவர்கள் வந்து இந்தியில் பேசினால் கூட அவர்களுக்கு மொழி பெயர்ப்பு செய்யப்படும். ஆனால் வானதிக்காக வீடு வீடாக இந்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Hindi takes the limelight in the Coimbatore South constituency campaign for BJP candidate Vanathi Srinivasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X