காட்டி தந்த கண்ணாடி வளையல்.. மூதாட்டி கொலையில் சிக்கிய பக்கத்து வீட்டு பெண்! கோவை போலீசின் சூப்பர் புலன் விசாரணை

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை குனியமுத்தூரில் மூதாட்டி கொலை வழக்கில் பக்கத்து வீட்டு இட்லிக்கடை பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்தில் கிடந்த உடைந்த கண்ணாடி வளையல் கொண்டு போலீசார் புலன் விசாரணை நடத்தி அந்த பெண்ணை கைது செய்தது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

how-did-coimbatore-police-crack-56-year-old-womans-murder-case-with-brokern-glass-bangle-details-h

'சிறு துரும்பும் பல் குத்த உதவும்' என்பது போல் கொலை சம்பவங்களில் கிடைக்கும் சின்ன சின்ன ஆதாரங்கள் கூட கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவும் என்பதற்கு பல வழக்குகள் உதாரணமாக உள்ளன. அந்த வகையில் தான் கோவையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கோவை குனியமுத்தூரில் உள்ள வெற்றிலைக்காரர் தெருவில் வசித்த வந்தவர் எம் விஜயலட்சுமி (வயது 58). இவர் கணவரை இழந்ததால் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் பெயர் மாவியா. இவர் திருமணம் ஆனதால் வேறு இடத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 15ம் தேதி மாவியா தனது கணவருடன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மாவியாவின் தாய் விஜயலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் விஜயலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுண் தங்கசங்கிலி மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

அதுமட்டுமின்றி விஜயலட்சுமி இறந்து கிடந்த இடத்தில் உடைந்த கண்ணாடி வளையல்கள் கிடந்தன. அது இறந்து கிடந்த விஜயலட்சுமியின் வளையல் கிடையாது. இதனால் விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம். குறிப்பாக யாராவது ஒரு பெண் அவரை கொன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதற்கிடையே தான் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் விஜயலட்சுமி மூச்சுத்திணறடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது பக்கத்து வீட்டில் வசித்து கொண்டு இட்லி கடை நடத்தி வரும் கே விஜயலட்சுமி (42) என்பவரின் மீது சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் அவர் தனது ஒரு கையில் மட்டுமே வளையல் அணிந்திருந்தார். இன்னொரு கையில் அவர் வளையல் அணியவில்லை. அதோடு அவர் அணிந்திருந்த வளையலும், கொலையான விஜயலட்சுமியின் உடல் அருகே கிடந்த வளையலும் ஒன்றாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இட்லி கடை கே விஜயலட்சுமியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் மூதாட்டி எம் விஜயலட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அணிந்திருந்த 2 பவுண் தங்க செயினுக்கு ஆசைப்பட்டு ஆள் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து அவரை மூச்சுத்திணறடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்த சமயத்தில் கொலையான எம் விஜயலட்சுமி தப்பிக்க முயற்சி செய்தார். இந்த சமயத்தில் இட்லி கடை கே விஜயலட்சுமி அணிந்திருந்த கண்ணாடி வளையல் உடைந்து நொறுங்கியது. கொலை செய்த பதற்றத்தில் உடைந்த வளையல் துண்டுகளை அவர் எடுக்காமல் சென்றுவிட்டேன்'' என்று கூறினார். இந்த வளையல் துண்டுகளால் தான் தற்போது இட்லி கடை கே விஜயலட்சுமி போலீசில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+